சுடச் சுடச் செய்திகள்

சிங்கப்பூர்: தளவாடத் துறையில் 1,300 வேலைகள்

சிங்கப்பூரில் தளவாடத் துறையில் 1,300 வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. அவற்றில் மூன்றில் ஒன்று பிஎம்இடி எனப்படும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழில்நுட்பர்களுக்கானது.

செப்டம்பர் மாத இறுதியில் இருந்த 2,100 வேலை மற்றும் பயிற்சி வாய்ப்புகளில் இது 60% என மனிதவள அமைச்சு அதன் இன்றைய (அக்டோபர் 27) வாராந்திர வேலை அறிக்கையில் குறிப்பிட்டது.

அவற்றுள் $4,000 முதல் $7,000 வரையிலான ஊதியத்துடன் வட்டார விற்பனை மேலாளர்கள், வர்த்தக மேம்பாட்டு மேலாளர்கள் உள்ளிட்ட பிஎம்இடி வேலைகளும் அடக்கம். தளவாட மேலாளர் பணிக்கான ஊதியம் $3,700 முதல் $7,250 வரை இருந்தது.

அந்தத் துறையில், சேமிப்புக் கிடங்கில் அடுக்குவது, வேறு இடங்களுக்கு மாற்றுவது, பொட்டலமிடுவது, லேபல் ஒட்டுவது போன்ற பணிகளை மேற்கொள்ளும் ஊழியரணியும் தேவைப்படுவதால் 64 விழுக்காட்டு வேலைகள் அந்த வகையைச் சேர்ந்தவை.

இந்த வேலைகளைத் தவிர, 510 பயிற்சிப் பணிகளும் 290 பயிற்சி வேலை வாய்ப்புகளும் உள்ளன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon