சிங்கப்பூரில் 500 ஊழியர்களைக் குறைக்கும் ஷெல் நிறுவனம்

சிங்கப்பூரில் 500 ஊழியர்களைக் குறைக்கும் ஷெல் நிறுவனம்

1 mins read
a12c1d39-070e-4b4a-a738-3418f92c8f5a
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஷெல் சிங்கப்பூர் நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளில் பூலாவ் புக்கோமில் 500 ஊழியர்களைக் குறைக்க இருக்கிறது.

கச்சா எண்ணெய்ச் சுத்திகரிப்புக்குப் பதிலாக கரிமம் குறைந்த எண்ணெய்யை நிறுவனம் கையாள இருப்பதே இதற்குக் காரணம்.

ராயல் டச் ஷெல் நிறுவனத்தின் சிங்கப்பூர் துணை நிறுவனமான ஷெல் கம்பெனிஸ் இன்று இந்த அறிவிப்பை விடுத்தது.

நிறுவனம், புக்கோமில் பணியாற்றும் 1,300 ஊழியர்களில் 200 பேரை அடுத்த ஆண்டில் குறைத்துவிடும் என்றும் அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 300 பேர் ஆட்குறைப்புக்கு ஆளாவார்கள் என்றும் நிறுவனம் அறிவித்தது.

நாள் ஒன்றுக்கு அந்த ஆலையில் இப்போது 500,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்படுகிறது.

இந்த அளவை 250,000 பீப்பாய்களாகக் குறைக்க நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

இந்தத் திட்டம் வேகமாக, அநேகமாக அடுத்த ஒன்று அல்லது இரண்டாண்டுகளில் நிறைவேற்றப்படும் என்று ஷெல் கம்பெனிஸ் தலைவர் திருவாட்டி ஆவ் கா பெங் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்