சுகாதார அமைச்சர்: பலவகை தடுப்பூசிகளைப் பெற சிங்கப்பூர் முயற்சி

சுகாதார அமைச்சர்: பலவகை தடுப்பூசிகளைப் பெற சிங்கப்பூர் முயற்சி

2 mins read
b1d67b96-0c78-421e-813d-02f441c9454f
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மக்­களில் பல்­வேறு பிரி­வி­ன­ருக்­கும் கொவிட்-19 தடுப்­பூசி கிடைப்­ப­தற்கு ஏது­வாக, ஒரே ஒரு நிறு­வனத்­தின் தயா­ரிப்பை மட்­டும் சார்ந்­தி­ரா­மல், பல்வேறு நிறு­வ­னங்­களின் தடுப்­பூ­சி­க­ளைப் பெறு­வ­தற்­கான முயற்­சி­களை அர­சாங்­கம் மேற்­கொள்­ளும் என்று சுகா­தார அமைச்­சர் கான் கிம் யோங் தெரி­வித்து இருக்­கி­றார்.

பட்­டி­ய­லில் எந்­தெந்த தடுப்­பூ­சி­கள் இடம்­பெ­றும், எந்­தப் பிரி­வி­ன­ருக்­குத் தடுப்­பூசி வழங்­கப்­படும் என்­பன போன்ற விவ­ரங்­கள் அடங்­கிய திட்­டம் தீட்­டப்­பட்டு வரு­வ­தாக திரு கான் குறிப்­பிட்­டார்.

கொவிட்-19 தொற்­றுக்­கெ­தி­ரான அமைச்­சு­கள்­நிலை பணிக்­கு­ழு­வின் நேற்­றைய மெய்­நி­கர் செய்­தி­யா­ளர் சந்­திப்­பின்­போது அமைச்­சர் கான் இந்த விவ­ரங்­க­ளைத் தெரி­வித்­தார்.

ஒரு தடுப்­பூ­சி­யைத் தேர்வு செய்­யும்­போது, வெவ்­வேறு பிரி­வி­ன­ரி­டத்­தில் அதன் செயல்­தி­றன், பாது­காப்பு அம்­சங்­கள் ஆகி­யவை கணக்­கில் எடுத்­துக் கொள்­ளப்­படும் என்று அவர் குறிப்­பிட்­டார்.

"சில பிரி­வி­ன­ரி­டத்­தில் சில தடுப்­பூ­சி­கள் செயல்­தி­றன்­மிக்­க­வை­யாக இருக்­கும். எடுத்­துக்­காட்­டாக, சில தடுப்­பூ­சி­கள் குழந்­தை­க­ளி­டத்­தி­லும் சில தடுப்­பூ­சி­கள் மூத்த குடி­மக்­க­ளி­டத்­தி­லும் செயல்­தி­றன் குறைந்­த­வை­யாக இருக்­க­லாம்," என்­றார் அவர்.

தடுப்­பூசி கிடைத்­தா­லும்­கூட, ஒரே நேரத்­தில் நாட்டு மக்­கள் அனை­வ­ருக்­கும் அதை வழங்­கு­வது சாத்­தி­ய­மில்லை என்­றும் படிப்­படி­யாக அது வழங்­கப்­படும் என்­றும் அமைச்­சர் கான் சொன்­னார்.

தடுப்பூசி வழங்குவதில் கொரோனா தொற்றை எதிர்த்து முன்­க­ளத்­தில் நின்று போராடி வரும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­களுக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­ப­ட­லாம் என்­றும் அவர்­க­ளைத் தொடர்ந்து, மூத்த குடி­மக்­கள் போன்ற எளி­தில் பாதிக்­கப்­பட வாய்ப்­புள்ள பிரி­வி­ன­ருக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­படலாம் என்­றும் அவர் கூறி­னார்.

ஃபைஸர் நிறு­வ­னம் உரு­வாக்கி­இருக்கும் தடுப்­பூசி 90 விழுக்­காட்­டிற்கு மேல் செயல்­தி­றன்­மிக்­க­தாக இருப்­ப­தைச் சுகா­தார அமைச்­சின் மருத்­து­வச் சேவை­க­ளுக்­கான இயக்­கு­ந­ரும் இணைப் பேரா­சி­ரி­யரு­மான கென்­னத் மாக் சுட்­டிக்­காட்­டி­னார்.

இது வர­வேற்­கத்­தக்க செய்தி என்­றா­லும், ஃபைஸர் மற்­றும் மூன்­றாம் கட்­டச் சோத­னை­க­ளின் இறுதி­நி­லை­யில் இருக்­கும் மருந்து நிறு­வனங்­க­ளின் தடுப்­பூ­சி­கள் குறித்து அதிக தக­வல்­கள் தேவைப்­ப­டு­வதாகப் பேரா­சி­ரி­யர் மாக் குறிப்­பிட்­டார்.

எடுத்­துக்­காட்­டாக, தடுப்­பூ­சி­கள் நீடித்த நோயெ­திர்ப்­புத் திறனை அளிக்­கா­மல் போனால், ஒரு நோயா­ளிக்கு மீண்­டும் தடுப்­பூசி போட வேண்­டிய நிலை ஏற்­ப­ட­லாம்.

உள்­ளூ­ரி­லேயே கொரோனா தொற்­றுக்­குத் தடுப்­பூசி கண்­டு­பிடிப்­பதை ஊக்­கு­விக்­கும் முயற்­சி­கள் இடம்­பெற்று வரு­வ­தா­க­வும் திரு மாக் சொன்­னார். அதற்­குச் சான்­றாக, டியூக்-என்­யு­எஸ் மருத்­து­வக் கல்வி நிலை­ய­மும் 'ஆர்க்­டி­யூ­ரஸ் தெர­பி­யூட்­டிக்ஸ்' எனும் அமெ­ரிக்க மருந்து நிறு­வ­ன­மும் இணைந்து ஒரு தடுப்­பூ­சியை உரு­வாக்­கும் முயற்­சி­யில் ஈடு­பட்­டி­ருப்­பதை அவர் சுட்­டி­னார்.

"இத்­த­கைய ஆய்­வு­களும் பங்­கா­ளித்­து­வங்­களும் நம் மக்­க­ளி­டம் நல்ல விளை­வு­களை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய பல்­வேறு தடுப்­பூ­சி­க­ளைப் பெற்­றுத் தரும் என நம்­பிக்­கை­யுடன் இருக்­கி­றோம்," என்­றார் பேரா­சி­ரி­யர் மாக்.

குறிப்புச் சொற்கள்