பிரதமர் லீ: நமது நீதிமுறையைப் பேணி, மேம்படுத்த தொடர்ந்து பாடுபடுவோம்

பிரதமர் லீ: நமது நீதிமுறையைப் பேணி, மேம்படுத்த தொடர்ந்து பாடுபடுவோம்

1 mins read
b40ab8b2-2a70-4420-9826-ad0939e3551e
இந்தோனீசிய பணிப்பெண் பார்தி லியானி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

நீதி, சமத்துவத்தின் அடிப்படையிலான ஜனநாயக சமுதாயத்தை அமைப்பதே சிங்கப்பூரின் குறிக்கோள் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

அதை அடைய, நமது சட்டங்களை முறையாகவும் நியாயமாகவும் நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் என்று பிரதமர் கூறியுள்ளார்.

இந்தோனீசியாவைச் சேர்ந்த முன்னாள் பணிப்பெண் குமாரி பார்தி லியானி விவகாரம் தொடர்பில் சட்ட அமைச்சர் கா.சண்முகம் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் அமைச்சர்நிலை விளக்கம் அளித்தார்.

அதைக் குறிப்பிட்டு தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், நமது நீதிமுறையைப் பேணி, மேம்படுத்த தொடர்ந்து பாடுபடுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்