$2 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல்

1 mins read
9f4d7728-b580-446b-baf3-a5281b56b580
படங்கள்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 3

சிங்கப்பூரில் கடந்த புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் 14.1 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. வேறு போதைப் பொருள்களும் கைப்பற்றப்பட்டன.

கடந்த 2001ஆம் ஆண்டில் 14.9 கிலோ போதைப்பொருளை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த புதன்கிழமை (நவம்பர் 11) மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் 2.8 கிலோ 'ஐஸ்', 7.5 கிலோ கஞ்சா, 323 கிராம் எக்ஸ்டசி துண்டுகள், 28 எக்ஸ்டசி மாத்திரைகள், 1,008 எரிமின்-5 மாத்திரைகள், $12,629 ரொக்கம் ஆகியவை தீவின் பல்வேறு பகுதிகளிலிருந்து கைப்பற்றப்பட்டன.

நேற்று முன்தினம் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களின் மொத்தமதிப்பு சுமார் $2 மில்லியன்.

இதன் தொடர்பில் 29 முதல் 55 வயதுக்குட்பட்ட மூன்று ஆடவர், இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்