சிங்கப்பூரில் மேலும் 12 பேருக்கு கொவிட்-19; மொத்த எண்ணிக்கை 58,114

சிங்கப்பூரில் மேலும் 12 பேருக்கு கொவிட்-19; மொத்த எண்ணிக்கை 58,114

1 mins read
ce3be7d1-d666-4a3f-8f26-22a85fd80c25
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (நவம்பர் 13) 12 பேர் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுடன் சேர்த்து, இங்கு கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 58,114ஆக உயர்ந்தது.

புதிதாகப் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். சிங்கப்பூர் வந்ததும் அவர்கள் வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

சமூகத்திலோ, ஊழியர் தங்கும் விடுதியிலோ பாதிப்பு இல்லை.

நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 11 பேரும் வெளிநாடுகளிலிருந்து வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள். நேற்றும் உள்ளூரில் புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் இல்லை.

குறிப்புச் சொற்கள்