உணவு விரயத்தைத் தடுக்க புது வழி

உணவு விரயத்தைத் தடுக்க புது வழி

1 mins read
29dafa93-b1be-4bd0-8346-5882a1104424
'எண்டோ இன்டஸ்ட்ரிஸ்' என்ற உள்நாட்டு நிறுவனம், விரயமாகும் உணவுப் பொருட்களை விலங்கு உணவாக மாற்றவும் உரமாக்கி உள்ளூர் பண்ணைகளுக்கு விநியோகிக்கவும் ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

'எண்டோ இன்டஸ்ட்ரிஸ்' என்ற உள்நாட்டு நிறுவனம், விரயமாகும் உணவுப் பொருட்களை விலங்கு உணவாக மாற்றவும் உரமாக்கி உள்ளூர் பண்ணைகளுக்கு விநியோகிக்கவும் ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளது.

அந்த நிறுவனம் ஒருவகைச் சிற்றினத்தைச் சேர்ந்த ஈக்கள், விரயமாகும் உணவை உண்ணும்படி செய்கிறது. அதன்மூலம் உருவாகக்கூடிய பொருள் பண்ணைகளுக்கு மிக முக்கியமானவையாக இருக்கின்றன.

சிங்கப்பூரில் உணவு விரயம் கடந்த பத்து ஆண்டுகளில் 30% அதிகரித்துள்ளது. 2018ஆம் ஆண்டில் இந்த அளவு 736,000 டன் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது. இந்த அளவிற்கு விரயமாகும் உணவை ஏற்றிச் செல்லவேண்டுமானால் 54,000 மாடி பேருந்துகள் தேவை எனக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்