சிங்கப்பூரில் மேலும் அறுவருக்கு கொவிட்-19; தொடர்ந்து 7வது நாளாக உள்ளூரில் புதிய தொற்று சம்பவங்கள் இல்லை

சிங்கப்பூரில் மேலும் அறுவருக்கு கொவிட்-19; தொடர்ந்து 7வது நாளாக உள்ளூரில் புதிய தொற்று சம்பவங்கள் இல்லை

1 mins read
74129dcb-9366-403a-a362-6846079caca3
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (நவம்பர் 17) ஆறு பேர் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுடன் சேர்த்து, இங்கு கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 58,130ஆக உயர்ந்தது.

புதிதாகப் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். சிங்கப்பூர் வந்ததும் அவர்கள் வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

தொடர்ந்து ஏழாவது நாளாக சிங்கப்பூரில் உள்ளூர் சமூகத்திலோ, ஊழியர் தங்கும் விடுதியிலோ பாதிப்பு இல்லை.

நேற்று கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ஐவரில் இருவர் சிங்கப்பூர் சிங்கப்பூரர்கள், இருவர் நீண்டகால வருகை அனுமதி உடையவர், ஒருவர் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்.

சிங்கப்பூரர்களான 74 வயது ஆடவர் இந்தியாவிலிருந்தும் 19 வயது பெண் இங்கிலாந்திலிருந்தும் இங்கு வந்தவர்கள்.

நீண்டகால வருகை அனுமதி உடையவர்களில் ஒருவர் ரஷ்யாவிலிருந்தும் ஒருவர் இந்தோனீசியாவிலிருந்தும் வந்தவர்கள். வேலை அனுமதி அட்டையுடன் வந்த நபர் இந்தோனீசியாவிலிருந்து வந்தவர்.

இந்த ஐவரும் சிங்கப்பூருக்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

சிங்கப்பூரில் இதுவரை 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

அனைத்துலக அளவில் கொரோனா தொற்றால் 54.8 மில்லியனுக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.32 மில்லியனைத் தாண்டியது.

குறிப்புச் சொற்கள்