முரசொலி: ஊழியர்களின் மனநலனை உறுதியாக மனதில் வைப்போம்

முரசொலி: ஊழியர்களின் மனநலனை உறுதியாக மனதில் வைப்போம்

4 mins read

மனித இனத்­தைப் பொறுத்­த­வரை உரு­வம் இல்லை என்­றா­லும் மனம்­தான் ஏறக்­கு­றைய எல்­லா­வற்­றுக்­கும் கார­ண­மாக இருக்­கிறது.

ஒவ்­வொ­ரு­வ­ரின் தனிப்­பட்ட வாழ்­வி­லும் குண நல­னி­லும் சமூ­கத்­தி­லும் தொழில்­து­றை­யி­லும் மொத்த மாக வீட்டு நல­னிலும் நாட்டு நல­னி­லும் மன­ந­லத்­தின் முக்­கி­யம் சொல்­லித் தெரி­ய­வேண்­டியதில்லை.

இப்­போ­தைய உல­கம் செயல்­படும் பாணி­யில் வீடும் நாடும் மகிழ்ச்­சி­க­ர­மா­க­வும் வெற்­றி­க­ர­மா­க­வும் திகழ வேண்­டு­மா­னால் அதற்கு மக்­க­ளின் மன­ந­லன் மூலா­தார தூணா­கத் திகழ்­கிறது.

வேலை பார்த்து பொருள் ஈட்­டும் ஊழி­யர்­க­ளின், தொழில்­ந­டத்­தும் முத­லா­ளி­க­ளின் மன­ந­ல­னைப் பொறுத்தே பல தொழில்­கள் உயி­ரோட்­டத்­து­டன் செயல்­ப­டு­கின்­றன, வெற்­றி­க­ர­மா­ன­வை­யாக முன்­னேறுகின்­றன. ஊழி­யர்­க­ளின் மன­ந­ல­னில் அக்­கறை காட்­டும் நிறு­வ­னங்­கள் உற்­பத்­தித்­தி­ற­னில் தோற்­ற­தில்லை என்­பதே கண்­கூடு.

பொது­வாக பொரு­ளி­யல் துறை­யில் பார்த்தால் இத்­து­றை­யைச் சேர்ந்­த­வர்­க­ளின் மன­ந­ல­னுக்கு ஊக்­கக் குறைவை உண்­டு­பண்­ணக்­கூ­டிய, மன­நலனுக்­குப் பாத­க­மா­கத் திக­ழக்­கூ­டிய காரண காரி­யங்­கள் அப்­போ­தைக்கு அப்­போது தலை­காட்டுவ துண்டு, பிறகு அவை மறைந்­து­போ­வ­துண்டு.

ஆனால் இப்­போது உல­கம் முழு­வ­தும் நில­வும் மனச்சோர்வு, மன­ந­லன் பாதிப்பு எல்லாம் இது­வரை பூமி காணாத ஒன்­றாக நீடிக்­கிறது.

கொவிட்-19 கிருமி கார­ண­மாக நிச்­ச­ய­மில்­லாத நிலை நீடிப்­ப­தால் உல­கம் முழு­வ­துமே அர­சாங்­கம், முத­லா­ளி­கள், ஊழி­யர்­கள் ஆகிய முத்­த­ரப்­பி­டத்­தி­லும் மன­ரீ­தி­யில் ஒரு வகை அச்­ச­மும் ஊக்­கக் குறை­வும் காணப்­ப­டு­கின்­றன.

அதி­லும் வேலை பார்த்து மாதா­மா­தம் சம்­ப­ளம் பெற்று வாழ்க்கை நடத்­தும் ஊழி­யர்­க­ளைப் பொறுத்­த­வரை இந்த மனச்­சோர்வு மன­ந­ல­னைப் பாதிக்­கும் அள­வுக்­குப் போய் இருக்­கிறது.

எனவே ஊழி­யர்­களின் மன­ந­ல­னில் மிக­முக்­கிய கவ­னம் செலுத்­த­வேண்­டிய ஒரு நிலை, தேவை முத­லா­ளி­க­ளுக்கு ஏற்­பட்­டு­விட்­டது.

கொவிட்-19 பாதிப்­பு­களை வெற்­றி­க­ர­மான முறை­யில் சமா­ளித்து தொட­ர்ந்து வெற்­றி­நடை போட இது அவ­சர அவ­சி­யம் என்­றா­கி­விட்­டது.

கொரோனா கிரு­மிப் பர­வ­லைத் தடுக்­கும் முயற்சி­யாக ஊழி­யர்­கள் வீட்­டில் இருந்து வேலை பார்க்­கி­றார்­கள். இத­னால் குடும்ப சச்­ச­ர­வு­கள் அதி­கரிக்க வாய்ப்பு உண்டு. வெளியே அலு­வ­ல­கம் செல்­லா­மல் வீட்­டி­லேயே வீட்டு வேலையையும் பார்த்­துக்­கொண்டு அலு­வ­லக வேலை­யை­யும் பார்க்க வேண்­டிய நிலை இருக்­கி­ன்ற ஊழி­யர்­க­ளி­டையே இது பெரும் மன அழுத்­தத்தை ஏற்­ப­டுத்­து­கிறது.

இதோடு, இந்த வேலை­யும் எத்­தனை நாட்­களுக்கோ என்று பயந்து பயந்து ஊழியர்கள் வேலை பார்க்­க­வேண்­டிய சூழ்­நிலை இருப்­ப­தால் மன அழுத்­தம் மன உளைச்­ச­லாகி மன நல­னைப் பாழாக்கி, மன நோய்க்­குக் கொண்டு செல்­கிறது.

இதில் மேலும் ஒன்­றை­யும் கவ­னிக்க வேண்டி இருக்­கிறது. கொவிட்-19க்குப் பிறகு அலு­வ­ல­கத்­துக்­குத் திரும்­பும்­போ­தும் ஊழி­யர்­க­ளுக்கு வேறு­மா­தி­ரியான மனநிலை இருக்­கும் என்­பது நிச்­ச­யம். பல காலம் வீட்­டி­லேயே வேலை பார்த்­து­விட்டு பிறகு அலு­வ­ல­கச் சூழ­லுக்கு மாறிக்­கொள்­வது பிரச்­சினை எது­வுமே இல்­லா­மல் சர­ள­மாக நடக்­கும் ஒன்­றாக இருக்­கும் என்று எதிர்­பார்க்க இட­மில்லை.

பொரு­ளி­யல் சூழ்­நிலைதான் இப்­படி எனில், சமூகச் சூழ­லை­யும் கவலைக்கு உரி­ய­தா­க­த்தான் உள்­ளது. சிங்­கப்­பூர் மன­ந­லக் கழ­கம் 2016க்கும் 2018க்கும் இடை­யில் ஓர் ஆய்வை நடத்­தி­யது.

ஏழு பேரில் ஒரு­வர் தன் வாழ்க்­கை­யில் ஏதோ­ஒரு வகை மனப் பிரச்­சி­னை­யைச் சந்­தித்து இருக்­கி­றார் என்று ஆய்வு தெரி­விக்­கிறது. இந்த அளவு 2010ல் எட்டு பேரில் ஒரு­வர் என்று இருந்­தது.

அனைத்­து­லக ஆய்­வு­களும் அபா­யச்­சங்­கையே ஊது­கின்­றன. வேலை­யில் மன உளைச்­சல் இருந்­தால் மன நலன் பாதிக்­கப்­படும் என்று அவை எச்­ச­ரிக்­கின்­றன. வேலை பார்ப்­பது மன­துக்கு நல்­லது; ஆனால் வேலைச் சூழல் பாதக­மாக இருந்­தால் ஊழி­யரின் உடல் நல­னும் மன நல­னும் கெடு­வ­தற்கு வாய்ப்­பு­கள் அதி­கம் என்று உலக சுகா­தார நிறு­வ­னம் தெரி­விக்­கிறது.

உல­கில் மனச் சோர்வு கார­ண­மாக 264 மில்­லி­யன் பேர் பாதிக்­கப்­பட்டுள்ளனர். அவர்­களில் பலரை கவ­லை­யும் சேர்ந்­து­கொண்டு அலைக்­க­ழிக்­கிறது. இவை உடற்­கு­றையை ஏற்படுத்தி­வி­டும் என்று இந்த நிறு­வ­னம் எச்­ச­ரிக்­கிறது. மனச்­சோர்­வும் கவ­லை­யும் பொரு­யி­லுக்குப் பேரா­பத்தை விளைவிக்கும்.

இத­னால் உற்­பத்­தித்­தி­றன் பாதிக்­கப்­பட்டு அதன் கார­ண­மாக உலக அள­வில் பொரு­ளி­யலுக்கு ஏற்படக்­கூ­டிய பாதிப்பு US$ 1 டிரில்­லி­யன் அளவுக்கு இருக்­குமென சுகா­தார நிறு­வ­னம் மதிப்­பிட்­டுள்­ளது.

சிங்­கப்­பூர், இவை எல்­லா­வற்­றை­யும் எப்­போ­துமே கருத்­தில்கொண்டு, ஊழி­யர்­க­ளுக்கு வேலை தொடர்­பில் ஏற்­ப­டக்­கூ­டிய மன­ந­லன் பாதிப்­பு­க­ளைத் தவிர்த்து­விட வேண்­டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறது. கொவிட்-19 பின்­ன­ணி­யில் இது இமாலய முக்­கி­யத்­து­வம் பெறு­கிறது.

ஆகை­யால் அண்­மை­யில் அர­சாங்­கம், தொழிற் சங்­கம், முத­லாளிகளைப் பிர­தி­நி­திக்­கும் முத்­த­ரப்­புக் குழு தெரி­வித்­துள்ள பரிந்­து­ரை­களை நிறு­வனங்­களும் சரி, ஊழி­யர்­களும் சரி, மிக­வும் முக்­கி­ய­மா­னவை என்­றும் மிக­வும் தேவைப்­ப­டு­பவை என்­றும் கருத வேண்­டும்.

ஊழி­ய­ரின் வேலை-வாழ்க்கை இரண்­டுக்­கும் இடை­யில் ஒரு நல்ல இணக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் கொள்கை ஒன்றை உரு­வாக்­க­ வேண்­டும் என்று முக்­கி­ய­மான ஒரு பரிந்­துரை தெரி­விக்­கிறது.

வேலை நேரத்­திற்­குப் பிறகு அனுப்­பப்­படும் வேலை தொடர்­பான மின்­னஞ்­சல்­கள், குறுஞ்­செய்­தி­க­ளுக்கு- அவை அவ­ச­ரம் என்று குறிப்­பி­டப்­பட்­டா­லொ­ழிய - அடுத்த நாள் வேலை நேரத்­தின்­போ­து­தான் பதில் வரும் என்று எதிர்­பார்க்­கக்­கூ­டிய ஓர் ஏற்­பாடு இருக்­க­ வேண்­டும்.

வீட்­டில் இருந்து வேலை செய்­தா­லும் ஊழியர்­களுக்கு வேலை நேரத்­திற்­குப் பிறகு ஓய்வு வேண்­டும்; இல்லை எனில் தங்­கள் நிறு­வ­னத்­தின் உற்­பத்­தித்­தி­ற­னுக்­குப் பாதிப்பு ஏற்­படும் என்­பதை முத­லா­ளி­கள் உணர்ந்தே ஆக­வேண்­டும். அவ்வப்போது ஊழி­யர்­களின் மன நிலையை நிறு­வ­னங்­கள் கண்­கா­ணித்து, மதிப்­பிட்டு ேதவை­யான நட­வ­டிக்கைளை எடுத்­து­வர வேண்­டும்.

அதே­போல் ஊழி­யர்­களும் மனப் பிரச்­சினை ஏதா­வது தலை தூக்­கி­னால், முற்­றி­வி­டும் அளவுக்கு விட்­டு­வி­டா­மல் உடனே உதவி நாட வேண்­டும். கொவிட்-19 பாதிப்­பு­களில் இருந்து வேக­மாக தலை நிமிர வேண்­டும் என்ற அவ­ச­ரத்­தில் ஊழி­யர் மன­ந­ல­னில் கோட்­டை­விட்­டு­விட்­டால் அடிப்­படையே ஆட்­டம் கண்­டு­வி­டும் என்­ப­தை மறக்கக்கூடாது.

குறிப்புச் சொற்கள்