சிங்கப்பூரில் இன்று (நவம்பர் 22) 12 பேர் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுடன் சேர்த்து, இங்கு கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 58,160 ஆக உயர்ந்தது.
புதிதாகப் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். சிங்கப்பூர் வந்ததும் அவர்கள் வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
தொடர்ந்து 12வது நாளாக சிங்கப்பூரில் உள்ளூர் சமூகத்திலோ, ஊழியர் தங்கும் விடுதியிலோ பாதிப்பு இல்லை.
நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட ஐவரில் ஒருவர் மெக்சிகோவிலிருந்து வந்த சிங்கப்பூரர், ஒருவர் பிரிட்டனிலிருந்து வந்த சிங்கப்பூர் நிரந்தரவாசி. பிலிப்பீன்சிலிருந்து வேலை அனுமதிச் சீட்டுடன் சிங்கப்பூரிலிருந்து வந்த இருவர், நீண்டகால வருகை அனுமதியுடன் ஓமானிலிருந்து வந்த ஒருவர் ஆகிய ஐவர் அவர்கள்.
சிங்கப்பூரில் இதுவரை 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.
அனைத்துலக அளவில் 56.8 மில்லியனுக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.36 மில்லியனைத் தாண்டியது.


