பிரதமர் லீ: தடுப்பு மருந்தின் நியாயமான விநியோகம், வலுவான தொற்றுநோய் கண்காணிப்பு வேண்டும்

கொவிட்-19 தடுப்பு தடுப்பு மருந்து எல்லாருக்கும் நியாயமாக விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்தும்படி உலக தலைவர்களை பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்தி இருக்கிறார்.

அதோடு, தொற்றுநோய் கண்காணிப்பு கட்டமைப்பைப் பலப்படுத்தும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஜி20 உச்சமாநாட்டின் முதல் நாளான சனிக்கிழமை உரையாற்றிய பிரதமர், கொவிட்-19 தொற்றைச் சமாளிக்க தேவைப்படும் உலக அளவிலான முயற்சிகளை ஒருங்கிணைக்கவும் முன்னின்று செயல்படுத்தவும் பொருத்தமான நிலையில் இந்த ஜி20 அமைப்பு இருக்கிறது என்றார்.

ஜி20 இரண்டு நாள் கூட்டத்துக்குத் தலைமை தாங்கி நடத்தும் சவூதி அரேபியா எடுத்துள்ள முயற்சிகளை அவர் சுட்டினார்.

நிதி வளங்களை, முன்னுரிமைகளை, கொள்கைகளை உலக அளவில் ஒருங்கிணைத்து அதன் மூலம் சவூதி அரேபியா உலக நடவடிக்கைகளுக்குத் தெம்பூட்டி இருக்கிறது.

வலுவான, கட்டிக்காக்கக்கூடிய பொருளியல் மீட்சிக்கு உரிய ஜி20 செயல்திட்டத்தை பூர்த்தி செய்ததன் மூலமாகவும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு ஆதரவு அளித்து அதன் வழியாகவும் சவூதி அரேபியா இதைச் செய்துள்ளதாக திரு லீ குறிப்பிட்டார்.

இந்த முயற்சிகளை சிங்கப்பூர் முற்றிலும் ஆதரிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். ஜி20 அமைப்பில் இடம்பெற்று இருக்கும் நாடுகளில் மேலும் பல நாடுகள் ஒன்றாகச் சேர்ந்து சாதிக்கக்கூடிய இரண்டு யோசனைகளையும் அவர் முன்வைத்தார்.

கொவிட்-19 தடுப்பு மருந்து எல்லாருக்கும் சரிசமமாகக் கிடைக்கவேண்டும். அது கட்டுப்படியாகக்கூடியதாகவும் இருக்கவேண்டும். இதை ஜி20 உறுதிப்படுத்த வேண்டும் என்று திரு லீ தெரிவித்தார்.

இந்த யோசனையை அந்தக் கூட்டத்தில் பல தலைவர்களும் முன்வைத்தனர். தடுப்பு ஊசி தயாரிப்பை வேகப்படுத்தவும் கொவிட்-19 தொடர்பில் நீண்டகால ஆயத்த பணிகளை மேம்படுத்தவும் உலக சுகாதார நிறுவனம், தொற்றுநோய் ஆயத்த புத்தாக்க கூட்டமைப்பு என்ற அமைப்பு ஆகியவற்றுடன் சிங்கப்பூர் தொடர்ந்து அணுக்கமாகச் செயல்படும் என்று திரு லீ கூறினார்.

அடுத்ததாக ஏதேனும் தொற்றுநோய் ஏற்பட்டால் அதைத் திறம்பட சமாளிக்கத் தோதாக உலகம் தயாராக இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் உலக தொற்றுநோய் கண்காணிப்புக் கட்டமைப்பு பலப்பட வேண்டும் என்று பிரதமர் லீ மற்றொரு யோசனையை முன்வைத்தார்.

கொவிட்-19 உலகைப் படுமோசமாக பாதித்துவிட்டது. வேறு ஏதாவது தொற்றுநோய் தோன்றினால் அது இன்னும் கடுமையானதாக கொலைகார வெறியுடன் இருக்கக்கூடும் என்று பிரதமர் எச்சரித்தார்.

உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையில் பலதரப்பு ஒத்துழைப்பை எல்லா நாடுகளும் கைக்கொள்ளும் என்று திரு லீ நம்பிக்கை தெரிவித்தார்.

நாடுகள் சேர்ந்து செயல்படவேண்டிய அவசியத்தை கொவிட்-19 ஏற்படுத்தி இருக்கிறது என்ற பிரதமர், ஒவ்வொரு நாடும் பாதுகாப்பாக இருந்தால்தான் எல்லா நாடுகளும் பாதுகாப்பாக இருக்கும் என்றார்.

பலதரப்பு ஏற்பாட்டுக்கு ஊக்கமூட்டும் ஜி20 முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்க சிங்கப்பூர் தயாராக இருக்கிறது என்றும் திரு லீ குறிப்பிட்டார்.

நியாயமான, கணிக்கக்கூடிய, நிலையான அனைத்துலக ஒழுங்கு ஒன்றை ஏற்படுத்த ஜி20 எடுக்கும் முயற்சிகளுக்கும் சிங்கப்பூர் ஆதரவு தரும் என்று அவர் தெரிவித்தார்.

இத்தகைய ஓர் ஏற்பாடு, சிறிய, பெரிய நாடுகள் அனைத்தும் வளர்ச்சி அடைந்து செழிப்படைய உதவும் என்று பிரதமர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!