'சிங்கப்பூர்-ஹாங்காங் பயண ஒத்திவைப்பு இருநாடுகளும் சேர்ந்து எடுத்த முடிவு'

'சிங்கப்பூர்-ஹாங்காங் பயண ஒத்திவைப்பு இருநாடுகளும் சேர்ந்து எடுத்த முடிவு'

1 mins read
d0400215-1a42-414f-b300-f923219b00a5
படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், ஏஎஃப்பி -

சிங்­கப்­பூ­ருக்­கும் ஹாங்­காங்­கிற்­கும் இடையே மீண்­டும் தொடங்க இருந்த பய­ணத்தை ஒத்­தி­வைக்க இரு­நா­டு­களும் சேர்ந்து முடி­வெ­டுத்­தி­ருப்­ப­தாக வர்த்­தக, தொழில் அமைச்­சர் சான் சுன் சிங் தெரி­வித்­துள்­ளார்.

இரு­த­ரப்­பி­ன­ரும் முன்­வைத்த நிபந்­த­னை­க­ளுக்கு ஏற்ப மிக­வும் தெளி­வான முறை­யில் இந்த முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் தெரி­வித்­தார். சிங்­கப்­பூ­ருக்­கும் ஹாங்­காங்­கிற்­கும் இடை­யி­லான பய­ணம் நேற்று முன்­தி­னம் மீண்­டும் தொடங்க இருந்­தது.

ஆனால் அண்­மைக் கால­மாக ஹாங்­காங்­கில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வ­தால் பய­ணம் ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது. நிலைமை மாறி­ய­தும் பய­ணத்தை ஒத்­தி­வைக்க இரு­த­ரப்­பி­ன­ரும் மிக விரை­வாக முடி­வெ­டுத்­த­தாக திரு சான் கூறி­னார்.

ஒப்­பந்­தப்­படி சிங்­கப்­பூர் அல்­லது ஹாங்­காங்­கில் சமூக அள­வில் கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை ஒரு வாரத்­துக்கு சரா­ச­ரி­யாக ஐந்­தைக் கடந்­தால் பய­ணம் ஒத்­தி­வைக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

கொவிட்-19 தொடர்­பான அன்­றா­டப் பாதிப்பு பற்றி இரு­நா­டு­களும் தக­வல்­க­ளைப் பகிர்ந்­து­கொள்­வ­தாக திரு சான் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூர்-ஹாங்­காங் இடை­யி­லான பயணம் அடுத்த இரண்டு வாரங்­க­ளுக்கு ஒத்­தி­வைக்­கப்­படும் என்று கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று அறி­விக்­கப்­பட்­டது.

குறிப்புச் சொற்கள்