குடும்ப வன்முறைக்கு எதிராக அதிகரிக்கும் விழிப்புணர்வு

குடும்ப வன்முறைக்கு எதிராக அதிகரிக்கும் விழிப்புணர்வு

2 mins read
8434fde4-96ee-4db0-a984-b65b9643d4cc
நேற்று நடைபெற்ற தேசிய குடும்ப வன்முறை கட்டமைப்பு தொடர் பான மாநாட்டில் பங்கேற்ற (இடமிருந்து) சிங்கப்பூர் ஐக்கிய மகளிர் சங்கத்தின் தலைவர் ஜார்ஜியர்ட் டான், சமுதாய, குடும்ப மேம் பாட்டு மற்றும் கல்வி துணை அமைச்சர் சுன் சூலிங், சிங்கப்பூர் மகளிர் அமைப்புகள் மன்றத்தின் நேரடி சேவைகள் பிரிவின் தலைவர் லோரேன் லிம், காசா ராவுதா மகளிர் இல்லத்தின் மேலாளர் ஸஹாரா அரிஃப். படம்: சாவ் பாவ் -

குடும்ப வன்­முறை சம்­ப­வங்­கள் பற்றி இன்­னும் அதி­க­மான மக்­கள் புகார் கொடுத்து வரும் வேளை­யில், அர­சாங்­க­மும் குடும்ப வன்­முறை தொடர்­பான விழிப்­பு­ணர்வை அதி­கப்­ப­டுத்­தும் முயற்­சியை மேலும் தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்­ளது.

குடும்ப வன்­முறை என்­றால் என்ன என்­பதை மக்­கள் புரிந்­து­கொள்­ள­வும், தங்­க­ளி­டம் வரு­வோர் குடும்ப வன்­மு­றை­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்­களா என்­பதை கண்­டு­பி­டிக்­கும் உத்­தி­களை மருந்­தக ஊழி­யர்­க­ளுக்கு சொல்­லிக் கொடுக்­கும் பயிற்­சி­களும் அளிக்­கப்­ப­ட­வி­ருக்­கின்­றன.

நோய் முறி­ய­டிப்­புக் காலத்­துக்­குப் பிறகு, சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சின் பெரி­ய­வர்­கள் மற்­றும் சிறார் பாது­காப்­புச் சேவை­கள் பிரி­வுக்கு குடும்ப வன்­முறை தொடர்­பி­லான விசா­ரிப்­பு­கள் மாதத்­துக்கு சரா­ச­ரி­யாக 25% கூடி­யுள்­ளது.

ஏப்­ரல் முதல் மே மாதம் வரை­யி­லான விசா­ரிப்­பு­க­ளைக் காட்­டி­லும் ஜூன் மாதத்­துக்­கும் செப்­டம்­பர் மாதத்­துக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் கிடைக்­கப்­பெற்ற விசா­ரிப்­பு­கள் அதி­கம் என்று சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு மற்­றும் கல்வி துணை அமைச்­சர் சுன் சூலிங் தெரி­வித்­தார்.

நேற்று நடை­பெற்ற தேசிய குடும்ப வன்­முறை கட்­ட­மைப்பு தொடர்­பான மாநாட்­டில் பேசிய திரு­வாட்டி சுன், குடும்ப வன்­முறை பற்றி புகார் கொடுப்­ப­தில் பொது­மக்­கள் இப்­போது அதிக விழிப்­பு­டன் இருக்­கி­றார்­கள் என்­றும் இவ்­வாண்டு ஜன­வரி முதல் செப்­டம்­பர் வரை ஒரு மாதத்­துக்கு சரா­ச­ரி­யாக 118 சம்­ப­வங்­கள் விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன என்­றார்.

மேலும் தமது அமைச்சு, 'யூனிட்டி' மருந்­த­கங்­க­ளு­டன் இணைந்து குடும்ப வன்­முறை தொடர்­பில் அறி­கு­றி­க­ளைக் கண்­ட­றி­யும் பயிற்­சி­யை­யும் வழங்­கு­கிறது என்று கூறிய அமைச்­சர், என்­டி­யுசி ஃபேர்பி­ரைஸ் நிறு­வ­னத்­தின் கீழ் இயங்­கும் அந்த மருந்­த­கத்­தின் 46 ஊழி­யர்­க­ளுக்­குப் பயிற்­சி­ய­ளிக்­கப்­படும் என்­றார்.

சிங்­கப்­பூ­ரில் 60 'யூனிட்டி' மருந்­த­க கிளைகள் செயல்­ப­டு­கின்­றன. இன்று தொடங்­கும் அந்­தப் பயிற்­சி­யில் அந்த மருந்­த­கத்­தின் ஊழி­யர்­க­ளுக்கு குடும்ப வன்­மு­றை­யால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை அடை­யா­ளம் காணும் முறை கற்­றுக்­கொ­டுக்­கப்­படும்.

"இது­போன்ற சமூக கண்­டு­பிடிப்பு முயற்­சி­கள் குடும்ப வன்­மு­றை­யால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளைக் கண்­ட­றிந்து, அவர்­க­ளு­டன் நேர­டி­யா­கத் தொடர்­பு­கொண்டு, அவர்­க­ளுக்­குத் தேவைப்­படும் கூடு­தல் உத­வி­களை வழங்க உறு­து­ணை­யாக இருக்­கும்.

"'யூனிட்டி' மருந்­த­கங்­க­ளைத் தவிர, முயிஸ் எனப்­படும் சிங்­கப்­பூர் இஸ்­லா­மிய சமய மன்­றம், சிங்­கப்­பூ­ரில் உள்ள பிரஸ்­பித்­தீ­ரி­யன் தேவா­லா­யம் ஆகி­ய­வற்­று­ட­னும் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு இணைந்து குடும்ப வன்­முறை தொடர்­பான விழிப்­பு­ணர்வை அதி­கப்­ப­டுத்­தும் முயற்­சி­களில் இறங்­கி­யுள்­ளன.

"கொவிட்-19 நமது வேலை­யைப் பாதித்­தி­ருப்­பது தொடர்­பில் அதி­கம் பேசுப்­ப­டு­வது போல, இந்த கொள்­ளை­நோய் பர­வ­லுக்­குப் பிற­கும் நீடிக்­கக்­கூ­டிய குடும்ப வன்­முறை விவ­கா­ரத்­தி­லும் நாம் கூடு­தல் கவ­னம் செலுத்த வேண்­டும்," என்­றும் திரு­வாட்டி சுன் வலி­யு­றுத்­தி­னார்.

சமூக அமைப்­பு­கள் மட்­டு­மல்­லா­மல் வர்த்­த­கங்­க­ளு­ட­னும் அமைச்சு பணியாற்றி வருகிறது.

குறிப்புச் சொற்கள்