ஆர்டிஎஸ் இணைப்பு 2026ல் தயாராகிவிடும்

ஜோகூர் பாரு­வை­யும் சிங்­கப்­பூ­ரை­யும் இணைக்­கும் ஆர்­டி­எஸ் இணைப்பு ரயில் திட்­டம் 2026ஆம் ஆண்­டுக்­குள் தயா­ராகி விடும் என்று மலே­சி­யப் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் வீ கா சியோங் ஜோகூர் மாநில மன்­னர் இப்­ரா­ஹிம் இஸ்­கந்­த­ரி­டம் உறுதி தெரி­வித்­துள்­ளார்.

நேற்று முன்­தி­னம் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் இது குறித்து கருத்­து­ரைத்த திரு வீ, இந்­தத் திட்­டம் அம­லாக்­கம் பெறும்­போது ஜோகூர் மக்­க­ளுக்கு பெரும் நன்மை பயக்­கும் என்­றும் தெரி­வித்­தார்.

“இந்­தத் திட்­டத்தை மேற்­பார்­வை­யி­டும் போக்­கு­வ­ரத்து அமைச்­சின் பிர­தி­நிதி என்ற முறை­யில், இந்த ரயில் இணைப்­புத் திட்­டம் முறை­யாக மேற்­கொள்­ளப்­பட்டு, திட்­ட­மி­டப்­பட்ட காலத்­துக்­குள் அதா­வது 2026ஆம் ஆண்­டுக்­குள் நிறைவு பெற்­று­வி­டும் என்று உறு­தி­ய­ளிக்­கி­றேன்,” என்­றும் அமைச்­சர் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

இந்த நான்கு கிலோ மீட்­டர் இணைப்பு குறை­வான செலவு கொண்ட போக்­கு­வ­ரத்து முறை­யாக இருக்­கும் என்­றும் ஜோகூ­ரின் சுற்­றுலா, சொத்­துத் துறை­க­ளுக்கு சிறந்த பல­ன­ளிக்­கும் என்­றும் கூறி­னார்.

ஜோகூர் கடற்­பா­லத்­தில் பல்­லாண்­டு­க­ளாக நிகழ்ந்­து­வ­ரும் கடும் போக்­கு­வ­ரத்து நெரி­ச­லுக்கு இது தீர்­வாக அமை­யும் என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!