'என்எம்பி' பதவிக்கு எட்டு வேட்பாளர்கள் விண்ணப்பம்

1 mins read
7a06394f-2904-4b47-9dea-de6378e32004
சமூக தொழில்­மு­னை­வர் ஆந்­தியா ஓங்­கும் சிங்­கப்­பூர் சீன பல்­லிய இசைக்­கு­ழு­வின் நிர்­வாக இயக்கு­ நர் டெரன்ஸ் ஹோவும் இரண்­டாம் தவ­ணைக் காலத்­துக்கு விண்­ணப்­பித்­தி­ருக்­கி­றார்­கள். படங்கள்: KUA CHEE SIONG, ANTHEA ONG -

நிய­மன நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் (என்­எம்பி) பத­விக்கு இது­வரை எட்டு வேட்­பா­ளர்­கள் தங்­கள் விண்­ணப்­பங்­க­ளைச் சமர்ப்­பித்­தி­ருக்­கி­றார்­கள்.

அவர்­களில் இரு­வர் சமூக தொழில்­மு­னை­வர் ஆந்­தியா ஓங்­கும் சிங்­கப்­பூர் சீன பல்­லிய இசைக்­கு­ழு­வின் நிர்­வாக இயக்கு­ நர் டெரன்ஸ் ஹோவும் இரண்­டாம் தவ­ணைக் காலத்­துக்கு விண்­ணப்­பித்­தி­ருக்­கி­றார்­கள்.

'இஞ்­சி­னி­ய­ரிங் கூட்' எனும் லாபநோக்­க­மற்ற அமைப்­பின் நிர்­வாக இயக்­கு­நர் திரு ஜோஹான் அனு­வார், சமூக கலை­ஞர் திரு டெரன்ஸ் டான், மேடைக்­க­லை­ஞர் நபிலா சையது, நடி­கை­யும் நிகழ்ச்சி படைப்­பா­ளருமான ஆட்ரி லிம், என்­டி­யுசி துணைத் தலை­வர் அப்­துல் சமத் அப்­துல் வஹாப், ஆய்வு அறி­வி­ய­லா­ளர் ஆண்டி ஆங் ஆகி­யோரே அந்த எட்டு பேர்.

நாடா­ளு­மன்ற நாய­கர் டான் சுவான் ஜின் தலை­மை­யி­லான நாடா­ளு­மன்ற தேர்­வுக் குழு விண்­ணப்­பங்­களை ஆராய்ந்­து, மற்ற நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் கருத்­து­க­ளைக் கேட்­ட­றிந்­து, பின்­னர் தேர்வு பெற்ற வேட்­பா­ளர்­களை நேரில் சந்­தித்து பேசு­வார்­கள். பின்னர் இறுதிப் பட்டியல் அதிபரிடம் சமர்ப்பிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்