சுடச் சுடச் செய்திகள்

ஓய்வுபெறும் உணவங்காடி வர்த்தகர்களுக்கு உதவித் திட்டம்

உணவங்காடி கலாசாரம் நீடிப்பதற்காக பணிக்குழுவின் ‘வாரிசு உரிமை’ பரிந்துரை

உண­வங்­காடி கலா­சா­ரத்­தைப் பாது­காக்­கும் புதிய திட்­டம் குறித்து 19 உறுப்­பி­னர்­கள் அடங்­கிய உண­வங்­கா­டிப் பணிக்­குழு ஒன்று முன்­மொழிந்­துள்­ளது. அத்­திட்­டத்­தின்­படி மானிய உதவி ஏதும் பெறாத உண­வங்­கா­டிக் கடைக்­கா­ரர்­கள் ஓய்­வு­பெற விரும்­பி­னால், தங்­க­ளின் கடை­க­ளை­யும் திறன்­க­ளை­யும் உற­வி­னர் அல்­லா­த­வர்­க­ளி­டம் இனி ஒப்­ப­டைக்­க­லாம்.

புதி­தாக உண­வுக்­கடை தொடங்க விரும்­பு­ப­வர்­க­ளைப் பழைய உண­வங்­கா­டிக் கடைக்­காரர்­க­ளு­டன் இணைக்­கும் இந்த ‘வாரிசு உரிமை’ திட்­டம், முதன்­முறை­யாக அமல்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக தேசிய சுற்­றுச்­சூ­ழல் அமைப்பு அறி­வித்­தது. உண­வங்­கா­டித் துறை­யில் பல கால­மா­கவே இருந்­து­வ­ரும் பிரச்­சி­னை­யைக் கையாள இது உத­வும் என்று கூறப்­பட்­டது.

தேசிய அள­வில் உண­வங்­காடிக் கடைக்­கா­ரர்­க­ளின் சரா­சரி வயது 59. வய­தான கடைக்­கா­ரர்­க­ளால் புதி­ய­வர்­களை ஈர்க்க முடி­யாத நிலை­யும் இருந்­தது. குறிப்­பாக, தங்­க­ளுக்­குப் பிறகு உற­வி­னர்­கள், குடும்ப உறுப்­பி­னர்­க­ளி­டம் மட்­டுமே கடையை ஒப்­ப­டைக்க முடி­யும் என்­பது போன்ற கடு­மை­யான விதி­முறை­களும் இருந்து வந்­தன.

வாடகை தொடர்­பில் மானி­யச் சலுகை பெற்று வந்த உண­வங்­காடிக் கடைக்­கா­ரர்­கள் மட்­டுமே தங்­க­ளின் கடை­களை உற­வி­னர் அல்­லா­த­வர்­க­ளி­டம் தர முடிந்­தது. அடுத்த ஆண்­டின் முதல் காலாண்­டில் புதிய முன்­னோட்­டத் திட்­டத்­தின்­கீழ் ஓய்­வு­பெ­றும் உண­வங்­காடி கடைக்­கா­ரர்­க­ளு­டன் புதிய கடைக்­கா­ரர்­கள் இணைக்­கப்­ப­டு­வர்.

சமை­யல் குறிப்­பு­கள், சமை­யல் திறன்­கள் ஆகி­ய­வற்­றைக் கற்றுக்­கொ­டுப்­ப­து­டன் கடை­க­ளைச் சிறப்­பாக நிர்­வ­கிக்­க­வும் புதிய உண­வங்­கா­டிக் கடைக்­கா­ரர்­க­ளுக்­குக் கற்­றுத் தரப்­படும்.

உண­வங்­காடி நிலை­யங்­களில் தங்­க­ளின் வியா­பா­ரத்­தைக் குறைந்­தது 15 ஆண்­டு­கள் நடத்­திய அனு­ப­வம் உள்­ள­வர்­க­ளுக்கு உத­வு­வதே தற்­போ­தைக்கு இந்­தப் புதிய ‘வாரிசு உரிமை’ திட்­டத்­தின் நோக்­க­மா­கும்.

தற்­போது தங்­க­ளின் வாட­கைக் கட்­ட­ணத்­தில் மானி­யம் பெறாத சுமார் 600 சமைத்த உண­வுக்­கடைக்­கா­ரர்­களில் ஒரு சிறு பிரி­வி­ன­ருக்கு இப்­பு­திய திட்­டம் பொருந்­தும் என்­றது அமைப்பு.

பணிக்­கு­ழு­வில் பெரும்­பா­லும் உண­வங்­கா­டிக் கடைக்­கா­ரர்­களே இடம்­பெற்­றுள்­ள­னர். இவர்­கள் முன்­மொ­ழிந்த மற்ற யோச­னை­களை மறு­ஆய்வு செய்து நடை­மு­றைப்­படுத்­தும் என்­றும் விவ­ரங்­கள் அடுத்த ஆண்டு அறி­விக்­கப்­படும் என்­றும் அமைப்பு தெரி­வித்­தது.

‘டிம்­பெர் குரூப்’ நிறு­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­ந­ரும் பணிக்­கு­ழு­வின் தலை­வர்­க­ளுள் ஒரு­வ­ரா­ன­வ­ரு­மான ஹோலண்ட்-புக்­கிட் தீமா குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எட்­வர்ட் சியா, அனு­ப­வ­மிக்க உண­வங்­காடி வர்த்­த­கர்­கள் குறித்­துப் பேசி­னார்.

பலர் தங்­க­ளின் பெய­ரை­யும் சமை­யல் குறிப்­பு­க­ளை­யும் தங்­களுக்­குப் பிறகு வழங்க ஆளில்­லாத நிலை உள்­ள­தென அவர் குறிப்­பிட்­டார். நல்ல உண­வு­வ­கை­கள் இத­னால் மறைந்­து­வி­டு­வது வீண் என்­றும் அவர் கூறி­னார்.

‘யுனெஸ்கோ’ கலா­சார மர­பு­டை­மைப் பட்­டி­ய­லில் சிங்­கப்­பூ­ரின் உண­வங்­காடி கலா­சா­ரத்­தைச் சேர்ப்­ப­தற்­கான நிய­ம­னம் நடை­பெற்று வரும் இந்­நே­ரத்­தில், பணிக்­கு­ழு­வின் அறிக்கை சரி­யான சம­யத்­தில் முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் உண­வங்­காடி வர்த்­த­கம் சந்­தித்து வரும் முக்­கிய சவால்­க­ளைச் சமா­ளிக்க உத­வு­வ­தா­க­வும் நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற மூத்த துணை அமைச்­சர் ஏமி கோர் கருத்­து­ரைத்­தார்.

“சமை­யல் குறிப்­பு­கள், திறன்­கள், வழக்­கங்­கள் போன்­ற­வை கைமா­று­வ­தற்­கான வச­தி­யைச் செய்து கொடுப்­பதே திட்­டத்­தின் இலக்கு. இல்­லா­விட்­டால் அனு­ப­வம் வாய்ந்த ஒரு­வர், தமக்­குப் பிறகு கடையை எடுத்து நடத்த ஆளில்­லா­மல் துறையை விட்டு வெளி­யே­றும் நிலை வந்­து­வி­டும்,” என்­றார் அவர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon