சிங்கப்பூரில் மேலும் 7 பேருக்கு கொவிட்-19; உள்ளூரில் கிருமித்தொற்று குழுமங்கள் இல்லை

சிங்கப்பூரில் புதிதாக எழுவரிடம் கொரோனா கிருமித்தொற்று உறுதியான நிலையில், உள்ளூரில் தொற்று ஏற்பட்டு 15 நாட்களாகிவிட்டன.

இன்று உறுதிசெய்யப்பட்ட ஏழு கிருமித்தொற்று சம்பவங்களும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தொடர்புடையவை. சிங்கப்பூர் வந்தவுடன் அவர்களுக்கு வீட்டில் இருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இங்கு இதுவரை 58,190 பேர் கொரோனா கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

நேற்று 18 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் அறிவிக்கப்பட்டன. 13 வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள், நெதர்லாந்து, இந்தோனீசியா நாடுகளிலிருந்து வந்த இரண்டு சிங்கப்பூரர்கள் ஆகியோர் இதில் அடங்குவர்.

வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் 37 வயது ஆடவர், சார்ந்திருப்போர் அட்டை வைத்திருக்கும் 35 வயது மாது ஆகிய இருவரும் பாகிஸ்தானிலிருந்து வந்திருந்தார்கள். எஞ்சிய ஒருவர் குறுகியகால வருகை அட்டை வைத்திருப்பவர். 47 வயதுடைய அந்த ஆடவர், பிலிப்பீன்சிலிருந்து இங்கிருந்த கப்பலில் பயணம் செய்ய வந்திருந்ததாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் பிப்ரவரி 3ஆம் தேதிக்குப் பிறகு முதன்முறையாக கொவிட்-19 கிருமிக்குழுமங்கள் எதுவும் சிங்கப்பூரில் தற்போது இல்லை என்று அமைச்சு தெரிவித்துள்ளது. 15 பெஞ்சுரு வாக்கில் அமைந்துள்ள காசியா@பெஞ்சுருவில் இருந்துவந்த கிருமித்தொற்று குழுமத்தில் 28 நாட்களாக எந்த ஒரு புதிய கிருமித்தொற்று சம்பவமும் இல்லாததால் அக்குழுமம் மூடப்பட்டது.

தொடர்ந்து 37 பேர் மருத்துவமனையிலும் 39 பேர் சமூக வளாகங்களிலும் கிருமி பாதிப்பிலிருந்து குணமடைந்து வருகின்றனர். கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!