புற்றுநோயால் இறந்த சிறுவனின் பிஎஸ்எல்இ தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொண்ட பெற்றோர்

புற்றுநோயால் இறந்த சிறுவனின் பிஎஸ்எல்இ தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொண்ட பெற்றோர்

1 mins read
8c999b1b-a0dc-4cb2-9573-f90104bf9561
பிஎஸ்எல்இ எழுதிய 12 வயது ரஃபாயல் லீ, புற்றுநோய்க்கான சிகிச்சை பலனின்றி இம்மாதம் 13ஆம் தேதி உயிரிழந்தார். அவரது பெற்றோர் திரு வில்லியம் லீ, திருமதி வின்னி லீ இன்று அலெக்சாண்டிரா தொடக்கப்பள்ளிக்குச் சென்று, ரஃபாயலின் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொண்டனர். படங்கள்: திரு வில்லியம் லீ, ஷின் மின் நாளிதழ் -
multi-img1 of 2

பிஎஸ்எல்இ எழுதிய 12 வயது ரஃபாயல் லீ, தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது.

புற்றுநோயால் இம்மாதம் 13ஆம் தேதியன்று அவர் உயிரிழந்துவிட்டார்.

சிறுவனின் சார்பாக தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ள அவரது பெற்றோர் திரு வில்லியம் லீ, திருமதி வின்னி லீ இன்று அலெக்சாண்டிரா தொடக்கப்பள்ளிக்குச் சென்றிருந்தனர்.

குழந்தையாக இருந்தபோதே ரஃபாயலின் இடது கையில் ஓர் அரியவகை கட்டி இருந்தது. ஓராண்டு சிகிச்சைக்குப் பின் நோயின் வீரியம் சற்று குறைந்தது.

இருப்பினும், தொடக்கநிலை 2ல் இருந்தபோது சிறுவனுக்கு எலும்பு புற்றுநோய் இருப்பது உறுதியானது. மீண்டும் இடது கையில் தொடங்கி வலது தோள்பட்டை எலும்புக்கும் நுரையீரல்களுக்கும் அது பரவியது.

அறுவை சிகிச்சை சிக்கல்களால் பின்னர் ரஃபாயல் உயிரிழந்தார்.

இவ்வாண்டே பிஎஸ்எல்இ எழுதவேண்டும் என்று விரும்பிய சிறுவன், மாத்திரை எடுத்தவாறே தேர்வு எழுதியதாகக் கூறப்பட்டது.

களைப்போ, நோய் பாதிப்போ எதுவாக இருந்தாலும் பள்ளிக்குத் திரும்புவதையும் நண்பர்களுடன் இருப்பதையுமே ரஃபாயல் பெரிதும் விரும்பியதாக அவரின் தாயார் பகிர்ந்துகொண்டார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்