நெருக்கடிநிலையிலும் மிளிரும் சமூக உணர்வு

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யால் வீட்­டி­லேயே தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­ளும் கட்­டா­யம் பல சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்­க­லாம். பாது­காப்­பான தூர இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டிக்­கும் அவ­சி­ய­மும் ஏற்­பட்­டுள்­ளது.

ஆனால் இந்­தச் சூழ்­நிலை நமது சமூ­கத்தை மேலும் பலப்­ப­டுத்­தி­உள்­ள­தாக பொதுச் சேவை

செயல்திறன் மதிப்­பாய்வு அறிக்கை தெரி­வித்­துள்­ளது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான போரில் பலர் ஒன்­றி­ணைந்து செயல்­ப­டு­வதை அது சுட்­டி­யது. நெருக்­க­டி­நி­லை­யி­லும் சமூக உணர்வு மிளிர்­கிறது என்று அது கூறி­யது.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 பாதிப்பு முதன்­மு­த­லாக கடந்த ஜன­வரி மாதத்­தில் தலை­தூக்­கி­ய­போது தனி­ந­பர்­களும் வர்த்­த­கர்­களும்

அர­சாங்க அமைப்­பு­க­ளு­டன் இணைந்து உடல்­ந­லம் பாதிக்­கப்­பட்­டோர், பொரு­ளி­யல் நெருக்­க­டி­யால் பாதிக்­கப்­பட்­டோர் ஆகி­யோ­ருக்கு உத­விக்­க­ரம் நீட்­டி­னர்.

“சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டையே இருக்­கும் வலி­மை­மிக்க சமூக உணர்வை இது காட்­டு­கிறது. பிற­ர் நல­னில் சிங்­கப்­பூ­ரர்­கள் அக்­கறை கொள்­கின்­ற­னர். ஒன்­றி­ணைந்து செயல்

படு­வ­தன் மூலம் நெருக்­க­டி­

நி­லையை முறி­ய­டித்து உதவி தேவைப்­ப­டு­வோ­ருக்கு ஆத­ரவு அளிக்­க­லாம் என்­பதை இது நிரூ­பித்­துள்­ளது,” என்று பொதுச் சேவைத் தலை­வர் லியோ யிப் தெரி­வித்­தார்.

இரண்டு ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை வெளி­யி­டப்­படும் பொதுச் சேவை செயல்திறன் மதிப்­பாய்வு அறிக்கை, நாட்­டின் நல­னுக்­காக சிங்­கப்­பூ­ரர்­கள் பல்­வேறு துறைகளில் எவ்­வாறு செயல்­ப­டு­கின்­ற­னர் என்­பதை ஆராய்ந்து முடி­வு­களை வெளி­யி­டும்.

இவ்­வாண்டு வெளி­யி­டப்­பட்ட மதிப்­பாய்வு அறிக்கை பல முக்­கிய துறைகளில் சிங்­கப்­பூ­ரர்­க­ளின் செயல்­பா­டு­களை மேற்­கோள்­காட்டி உள்ளது. அவற்­றில் கொவிட்-19 நெருக்­க­டி­நி­லையை சிங்­கப்­பூ­ரர்­கள் எதிர்­கொள்­ளும் விதம் முக்­கிய இடம்­பி­டித்­துள்­ளது. நெருக்­க­டி­

நி­லை­யைச் சமா­ளிக்க தொண்­

டூ­ழி­யர்­கள், நன்­கொடை ஆகி­ய­வற்­றுக்­காக விடுக்­கப்­பட்ட அழைப்­புக்கு அமோக வர­வேற்பு கிடைத்­த­தாக புள்­ளி­வி­வ­ரங்­கள் காட்­டு­கின்­றன.

பலர் தாங்­க­ளா­கவே உத­வித் திட்­டங்­க­ளைத் தொடங்­கி­ய­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்

­பட்­டதாக சந்­தே­கிக்­கப்­பட்­டோரை மருத்­து­வ­ம­னை­க­ளுக்­குக் கொண்டு செல்ல முன்­வந்த 500க்கும் மேற்­பட்ட டாக்சி, தனி­யார் வாடகை கார் ஓட்­டு­நர்­கள் உதாரணமாகக் காட்டப்பட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!