ஜோகூர் பாரு-சிங்கப்பூர் ரயில் இணைப்பு திட்டம்: சிங்கப்பூருக்கு முதல் சிவில் குத்தகை

ஜோகூர் பாரு-சிங்கப்பூர் ரயில் இணைப்பு திட்டம்: சிங்கப்பூருக்கு முதல் சிவில் குத்தகை

1 mins read
17a1f1f2-757d-413f-a300-aa03498cce2f
படம்: தி ஸ்டார் -
Google News Preferred Icon

ஜோகூர் பாரு-சிங்­கப்­பூர் ரயில் இணைப்­புத் திட்­டத்­தின்­கீழ் சிங்­கப்­பூ­ருக்கு முதல் சிவில் குத்­தகை கிடைத்­துள்­ளது.

அந்த $932.8 மில்­லி­யன் குத்தகை­யின்­கீழ் பென்டா-ஓஷன் கட்­டு­மான நிறு­வ­னம், அடுத்த ஆண்­டின் முதல் காலாண்­டில் இணைப்­பின் சில பகு­தி­களில் பணி­க­ளைத் தொடங்­கும் என்று நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் தெரி­வித்­தது. இந்த நிறு­வ­னம் தற்­போது தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை­யில் உள்ள பிரைட் ஹில் மற்­றும் ஆர்ச்­சர்ட் நிலை­யங்­களில் பணி­களை மேற்­கொண்டு வரு­கிறது. ஜோகூர் பாரு- சிங்­கப்­பூர் ரயில் இணைப்­புத் திட்­டத்­தில் சிங்­கப்பூரின் நிலை­யம் உட்­லண்ட்ஸ் நார்த்­தில் அமைந்­தி­ருக்­கும்.

குத்­த­கை­யின்­கீழ் இந்த நிலை­யத்­து­டன் சுங்­கத்­துறை, குடிநுழைவு, தனி­மைப்­ப­டுத்­து­தல் ஆகிய பிரி­வு­கள் ஒரே இடத்­தில் இயங்­கு­வ­தற்­கான கட்­ட­ட­மும்

கட்­டப்­படும். இணைப்­புத் திட்­டத்­துக்­கான இரண்­டா­வது குத்­தகை அடுத்த ஆண்­டின் முதல் காலாண்­டில் வழங்­கப்­படும்.

2026ஆம் ஆண்­டுக்­குள் ஜோகூர் பாரு-சிங்­கப்­பூர் ரயில் இணைப்­புத் திட்­டம் இயங்­கத் தொடங்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஒவ்­வொரு திசை­யி­லும் ஒரு மணி நேரத்­துக்கு 10,000 பேர் வரை பய­ணம் செய்­வர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மலே­சி­யா­வின் நிலை­யம் ஜோகூர் பாரு­வில் உள்ள புக்­கிட் சாகா­ரில் அமைந்­தி­ருக்­கும்.

இந்த இணைப்­புத் திட்­டத்­தின் மூலம் இரு நிலை­யங்­க­ளுக்­கும் இடை­யி­லான பயண நேரம் வெறும் ஐந்து நிமி­டங்­கள் மட்­டுமே.

நான்கு கிலோ மீட்­டர் நீள­முள்ள ரயில் இணைப்­புப் பாதையை கட்டு­ வ­தற்­கான செல­வில் 39 விழுக்­காட்டை மலே­சியா ஏற்­கும் என்­றும் மீத­முள்ள தொகையை சிங்­கப்­பூர் ஏற்­கும் என்­பதில் இரு­நா­டு­க­ளின் அர­சாங்­கங்­கள் இணக்­கம் தெரி­வித்­துள்­ளன.

குறிப்புச் சொற்கள்