சிங்கப்பூரிலிருந்து வெளிநாட்டுப் பயணங்களுக்கு கொவிட்-19 காப்புறுதி

‘என்­டி­யுசி இன்­கம்’ நிறு­வ­னத்­தின் பயணக் காப்­பு­று­தியை வாங்­கு­வோ­ருக்கு இப்­போது கொவிட்-19 பாது­காப்­பும் கிடைக்­கும்.

வெளி­நாட்­டில் இருக்­கை­யில் கொவிட்-19 பாது­காப்பு மற்­றும் மருத்­து­வ­ம­னை­யில் தங்கி சிகிச்சை ­பெற நேர்ந்­தால் அதற்கு ஆகும் செல­வில் US$100,000 வரை பாது­காப்பு கிடைக்க இந்த காப்­பு­றுதி உத­வும்.

அவர்­கள் தேவை எனில் சிகிச்­சைக்­காக செல்­வது அல்­லது அவர்களைத் திருப்பி அனுப்­பு­வது ஆகி­ய­வற்­றுக்கு ஆகும் செல­வில் US$100,000 வரைப்­பட்ட பாது­காப்­பும் இதில் அடங்­கும்.

இப்­போது வாங்­கப்­படும் ஒரு­வழி பயணக் காப்­பு­று­தித் திட்­டங்­களில் இந்த கொவிட்-19 நன்மை­கள் எல்­லாம் தானா­கவே உள்­ள­டக்­கப்­படும்.

இருந்­தா­லும் இந்­தக் காப்­பு­று­தித் திட்­டங்­களை வாங்­கும்­போது, கொவிட்-19 கிரு­மித்­தொற்று பாதிப்பு அதி­க­மாக இருக்­கின்ற நாடு­கள் என்று உலக சுகா­தார நிறு­வ­னம் பிர­க­ட­னப்­ப­டுத்தி இருக்­கும் நாடு­க­ளுக்கு மேற்­கொள்­ளப்­படும் பய­ணங்­க­ளுக்கு இவை பொருந்­தா­து.

இன்­கம் நிறு­வ­னத்­தின் இப்­போ­தைய வரு­டாந்­திர பய­ணக் காப்­பு­று­திப் பாது­காப்­புத் திட்­டங்­களை வைத்­தி­ருக்­கும் சந்தாதாரர்­கள், இந்த நிறு­வ­னத்­து­டன் தொடர்­பு­கொண்டு தாங்­கள் இனி­மேல் மேற்­கொள்ள இருக்­கும் பய­ணத்­துக்கு கொவிட்-19 நன்மை­கள் உண்டா என்­ப­தைத் தெரிந்து­கொள்­ள­லாம்.

இது பற்றி கருத்து தெரி­வித்த இன்­கம் நிறு­வ­னத்­தின் பய­னீட்­டா­ளர் துறைக்­கான பொது நிர்­வாகி ஃபேபியன் இங், பொது­வாக வெளி­நாட்­டுப் பய­ணங்­கள் கட்டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள போதி­லும் சிலர் தொழில் நிமித்­த­மாக அல்லது வேறு ஏதே­னும் அவ­சர தேவை கார­ண­மாக வெளி­நாட்­டுக்­குச் செல்­ல­வேண்­டிய நிலை இருக்­கும் என்று கூறி­னார்.

இந்­நி­லை­யில், வெளி­நாடு களுக்­குச் செல்­வோர் தேவை­யான அனைத்து முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­க­ளை­யும் மிக முக்­கி­ய­மாக கருத வேண்­டும் என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!