சிங்கப்பூரில் மேலும் நால்வருக்கு கொவிட்-19; மொத்த எண்ணிக்கை 58,199

சிங்கப்பூரில் மேலும் நால்வருக்கு கொவிட்-19; மொத்த எண்ணிக்கை 58,199

1 mins read
878e9c80-5033-4f5b-82b4-10816a15858d
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் புதிதாக 4 கொரோனா தொற்றுச் சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டிருப்பதாகச் சுகாதார அமைச்சு இன்று (நவம்பர் 27) தெரிவித்தது.

அந்நால்வரும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். சமூகத்திலும் வெளிநாட்டு ஊழியர் விடுதிகளிலும் எவரும் பாதிக்கப்படவில்லை.

பாதிக்கப்பட்ட நால்வருக்கும் வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.

இதையடுத்து, சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 58,199ஆக அதிகரித்தது.

சமூகத்தில் ஒருவர், வெளிநாட்டில் இருந்து வந்த நால்வர் என மொத்தம் ஐவரை கொரோனா தொற்றியதாகச் சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்