$5 மில்லியன் இழப்பீடு கேட்ட மாது சமரச இணக்கம்

1 mins read
576111f1-c59f-4082-81d2-b7c789152ec6
திருவாட்டி சான் ஹுய் பெங், 47, என்ற பட்டயக் கணக்காளரான மாது, 2015 டிசம்பர் 1ஆம் தேதி சிம்ஸ் ரோட்டில் நடந்துசென்றபோது வழியில் இருந்த 1.8 மீட்டர் ஆழமான வடிகால் பள்ளத்தில் விழுந்துவிட்டார். அதனால் அவரின் குதிகாலில் எலும்பு முறிந்துவிட்டது. கோப்புப் படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

திருவாட்டி சான் ஹுய் பெங், 47, என்ற பட்டயக் கணக்காளரான மாது, 2015 டிசம்பர் 1ஆம் தேதி சிம்ஸ் ரோட்டில் நடந்துசென்றபோது வழியில் இருந்த 1.8 மீட்டர் ஆழமான வடிகால் பள்ளத்தில் விழுந்துவிட்டார். அதனால் அவரின் குதிகாலில் எலும்பு முறிந்துவிட்டது.

திறப்பில் விழுந்துவிட்டதால் உடலில் பாதிப்பு ஏற்பட்டதோடு தன் மனமும் பாதிக்கப்பட்டுவிட்டதாகக் கூறி பொதுப் பயனீட்டுக் கழகத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்து தனக்கு $5 மில்லியன் இழப்பீடு வேண்டும் என்று அவர் கேட்டார்.

இந்நிலையில், கழகத்தின் காப்புறுதி நிறுவனங்களுக்கும் அந்த மாதுக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டது. நிறுவனங்கள் முன்வைத்த தீர்வு யோசனையை இந்த ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி அவர் ஏற்றுக்கொண்டார். தற்போது அந்த மாது வழக்கைக் கைவிட்டுவிட்டார்.

இதனை இரண்டு தரப்பு வழக்கறிஞர்களும் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது. இரு தரப்புகளுக்கும் இடையில் ஏற்பட்ட சமரச தீர்வு பற்றிய விவரங்கள் ரகசியமானவை என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்