'வட்டார பரந்த பொருளியல் பங்காளித்துவ உடன்பாடு: முக்கிய பங்காற்றியது ஆசியான்தான்'

3 mins read
e9773a51-94f0-4888-a06e-523fa2b0a633
படம்: தொடர்பு தகவல் அமைச்சு -

உல­கி­லேயே ஆகப் பெரிய வர்த்­தக உடன்­பாடு நவம்­பர் 15ஆம் தேதி கையெ­ழுத்­தி­டப்­பட்­டது. அந்­தச் செய்­தியை உல­கம் முழு­வ­தும் ஊட­கங்­கள் பற்பல தலைப்புகளில் பல விதங்­களில் வெளி­யிட்­டன.

'சீனா தலை­மை­யில் வர்த்­தக உடன்­பாடு கையெ­ழுத்­தி­டப்­பட்டு இருக்­கிறது. இது அமெ­ரிக்­கா­வுக்கு ஒரு சவால்' என்று தலைப்­பிட்டு 'நியூ­யார்க் டைம்ஸ்' செய்தி வெளி­யிட்­டது.

சீனா­வைச் சேர்ந்த 'குளோ­பல் டைம்ஸ்' என்ற சஞ்­சிகை 'அந்த உடன்­பாடு மேற்கு பசி­பிக்­கில் அமெ­ரிக்க ஆதிக்­கத்தை முடித்­து­வி­டும்' என்று கருத்து வெளி­யிட்டது.

'வட்­டார பரந்த பொரு­ளி­யல் பங்­கா­ளித்­துவ உடன்­பாடு' என்று குறிப்­பி­டப்­படும் அந்த இணக்­கம், உல­கிற்கே ஒரு பெரிய முன்­னேற்­றம் என்று பிர­த­மர் லீ சியன் லூங் வர்­ணித்து இருந்­தார்.

இதை சிங்­கப்­பூர் செய்­தித்­தாட்­கள் வெளி­யிட்டு இருந்­தன.

அந்த உடன்­பாடு எட்டு ஆண்டு காலம் நடந்த பேச்­சு­வார்த்தை முடி­வில் கையெ­ழுத்­தா­னது.

சீனா தலை­மை­யில் அல்­லது சீனா­வின் மும்­முர முயற்­சி­க­ளால்­தான் உடன்­பாடு ஏற்­பட்­ட­தாக சில செய்­தி­களும் பகுப்­பாய்­வு­களும் தெரி­வித்­தன.

ஆனால் இப்­படி சொல்­வது முற்­றி­லும் சரி­யான ஒன்­றாக இருக்­காது என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் பேட்டி கண்ட கவ­னிப்­பா­ளர்­களும் அர­ச­தந்­தி­ரி­களும் தெரி­வித்து இருக்­கி­றார்­கள்.

சீனா­தான் அந்த உடன்­பாட்­டிற்கு முக்­கி­ய­மான கார­ணம் என்று ஊட­கம் கூறு­வது தவ­றான வழி­யைக் காட்­டு­வ­தாக இருக்­கும் என்று பழுத்த அனு­ப­வம் வாய்ந்த அர­ச­தந்­தி­ரி­யான பேர்ரி டெஸ்­கர் தெரி­வித்­தார்.

"ஆசி­யான் தலை­மைத்­து­வம் அந்த உடன்­பாடு வெற்­றி­க­ர­மாக கையெ­ழுத்­திட வழி­கோ­லி­யது.

"ஆசி­யான் இல்லை என்­றால் இந்த அள­வுக்கு பரந்த அள­வி­லான இணக்­கம் ஆசிய நாடு­களுக்கு இடையே ஏற்­பட்­டி­ருக்க முடி­யாது.

"ஆசி­யான் உச்­ச­நிலை கூட்­டத்­தில் அந்த உடன்­பாடு கையெ­ழுத்­தி­டப்­பட்­டது. அந்த உடன்­பாட்­டுக்கு ஆசி­யானே மைய கார­ணம் என்­பதை புலப்­ப­டுத்­து­வ­தாக இது இருக்­கிறது," என்று அவர் தெரி­வித்­தார்.

இது ஒரு­பு­றம் இருக்க, வட்­டார நிலை­யில் சீனா, ஜப்­பான், தென்­கொ­ரியா ஆகி­யவை கூட்­டாக முடிவு செய்த முத­லா­வது இத்­த­கைய உடன்­பா­டும் இதுவே ஆகும் என்று நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் எஸ். ராஜ­ரத்­னம் அனைத்­து­லக ஆய்வு பள்­ளி­யில் தனிச்­சி­றப்பு ஆய்­வா­ள­ராக உள்ள தூதர் டெஸ்­கர் கூறினார்.

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் அனைத்­து­லக சட்­டத்­தைப் போதிக்­கும் இணைப் பேரா­சி­ரி­யர் சைமன் டே, அந்த உடன்­பாட்டை மற்ற பங்­காளி நாடு­க­ளு­டன் முன்­னெ­டுத்­துச் செல்­வ­தற்கு வழி­காட்­டக்­கூ­டிய கட்­ட­மைப்­புக் கோட்­பாடு­களை வகுத்­தது ஆசி­யான்­தான் என்று குறிப்­பிட்­டார்.

இத­னி­டையே, அந்தப் பேச்­சு­வார்த்­தை­யில் சிங்­கப்­பூர் சார்­பாக ஈடு­பட்ட வர்த்­தக தொழில் அமைச்­சைச் சேர்ந்த ஆறு அதி­கா­ரி­கள், கடந்த புதன்­கி­ழமை செய்­தி­யா­ளர்­களி­டம் பேசி­னார்­கள்.

வட்­டார பரந்த பொரு­ளி­யல் பங்­கா­ளித்­துவ உடன்­பாட்டுப் பேச்­சு­வார்த்­தை­யில் இருந்து இந்­தியா வில­கிக்­கொண்­டது தங்­க­ளுக்கு அதிர்ச்­சி­யாக இருந்­த­தாக அப்­போது அவர்­கள் தெரி­வித்­த­னர்.

இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி அந்த உடன்­பாட்­டில் இந்­தியா இப்­போ­தைக்குச் சேர்ந்­து­கொள்­ளாது என்று 2019 நவம்பர் 4ஆம் தேதி அறி­வித்­தார்.

இது அதிர்ச்­சி­யை­யும் ஏமாற்­றத்­தை­யும் ஏற்­ப­டுத்­தி­விட்­ட­தாக சிங்கப்­பூர் பேச்­சு­வார்த்தை அதி­கா­ரி­களில் ஒரு­வ­ரான திரு­வாட்டி சுலைமா முகம்­மது, 63, தெரி­வித்­தார்.

உடன்­பாட்­டில் இருந்து வில­கு­வது என்று இந்­தியா முடி­வு­செய்து­விட்­ட­தால் இதர நாடு­களும் அதே போன்ற முடி­வு­களை எடுக்­கக்­கூடும் என்­பதே தங்­க­ளுக்கு முக்­கிய கவ­லை­யாக இருந்­தது என்று திரு­வாட்டி ஜிசெல்லி லீ, 27, என்ற மற்­றொரு அதி­காரி கூறி­னார்.

மற்ற அனைத்து நாடு­க­ளை­யும் விட்­டு­வி­டா­மல் ஐக்­கி­யப்­ப­டுத்தி உடன்­பாட்­டில் கையெ­ழுத்­திட செய்­வதே அடுத்த சவா­லாக இருந்­தது என்றார் திரு­வாட்டி லீ.

குறிப்புச் சொற்கள்