தாய்மொழி அல்லாத தமிழில் சிறந்த தேர்ச்சி

ஆங்­கி­லம், கணி­தம், அறி­வி­யல் பாடங்­களில் ‘ஏ-ஸ்டார்’ தகு­தி­யு­டன் 258 புள்ளி­கள் பெற்ற நார்த்­லாந்து தொடக்­கப்­பள்ளி மாண­வர் சுமன்­யு­விற்கு பெரும் மகிழ்ச்சி தந்­தது தமிழ்ப் பாடத்­தில் ‘ஏ’ தகு­தி­யு­டன் தேர்ச்சி பெற்­ற­து­.

அவ­ரின் பெற்­றோர் இரு­வ­ருமே தமிழ் படிக்­கா­த­வர்­கள். மருத்­து­வ­ரான தாயார் வட இந்­தி­யர். தந்தை பள்­ளி­யில் மலாய் மொழியை இரண்டாம் மொழி­யா­கப் பயின்­றவர். வீட்­டில் தமிழ் புழக்கமில்லை. எனினும், தன்முனைப்பாலும் ஆசி­ரி­யர்­க­ளின் ஆத­ர­வா­லும் தமி­ழில் சிறந்த தேர்ச்­சி­யைப் பெற்­றுள்­ளார் சுமன்யு.

“பல சொற்­களை மனப்­பா­டம் செய்து எழுத்­துத் தமிழை மேம்­ப­டுத்த முடிந்­தது. ஆயி­னும், பேச்­சுத்­த­மி­ழில் சிர­மப்­பட்­டேன். பாட்­டி­யு­டன் அடிக்­கடி பேசி­ய­தால் பேச்­சுத்­த­மி­ழும் மேம்­பட்­டது,” என்­றார் சுமன்யு.

“தொடக்­க­நிலை 1ல் அவனை இந்தி வகுப்­பில் சேர்ப்­பதா, தமிழ் வகுப்­பில் சேர்ப்­பதா என்ற குழப்­பம் ஏற்­பட்­ட­போது, சிங்­கப்­பூ­ரில் தமிழ் வாழும் மொழி­யாக உள்­ளது. அவ­னுக்­குத் தமி­ழைப் பேசிப் பழக வாய்ப்­புள்­ளது. பாடத்­தில் சந்­தே­கம் ஏற்பட்டால் சுமன்யு அதைப் பள்­ளி­யி­லேயே தீர்த்­துக்­கொள்­ள­லாம். எனவே, தமிழைத் தேர்வு செய்தேன்,” என்­றார் இந்­தி­யைத் தாய்­மொ­ழி­யா­கக் கொண்ட சுமன்­யு­வின் தாயார் பூஜா ஜெய­கோபி, 45,

சுமன்­யு­வின் வெற்­றிக்கு அவ­ரது கட்­டொ­ழுங்கு கார­ணம் எனக்கூறிய தந்தை ஜெய­கோபி ஜெய­ராம், 50, “சுமனை வழி­காட்­டும் ஒவ்­வொரு முறை­யும் நான் மகிழ்ச்சி அடை­கி­றேன்,” என்றார்.

தமது பள்­ளி­யின் சட்­டாம்­பிள்­ளை­யாக இருக்­கும் சுமன்­யுக்கு அறி­வி­யல் மிக­வும் பிடித்த பாடம். “புரிந்­தால்­தான் அறி­வியல் பாடத்­தில் சிறந்த தேர்ச்சி பெற­மு­டி­யும். அந்த சவால் எனக்­குப் பிடிக்­கும் என்ற சுமன்யு ராஃபிள்ஸ் உயர்­நி­லைப்­பள்­ளி­யில் சேர விரும்­பு­கி­றார். உயர்­நி­லைப் பள்­ளில் உயர் தமிழ் படிக்­கத் திட்­ட­மிட்­டி­ருப்­ப­தோடு, சிறந்த தேர்ச்சி பெற­வும் இலக்­குக் கொண்­டி­ருக்­கி­றார்.

மலையாளம் பேசும் வீட்டுச் சூழலில் வளர்ந்த கிரீண்டேல் தொடக்கப்பள்ளி மாணவன் விஷ்ணு சுபினுக்கு, சுயமாக தமிழைக் கற்றதில் அதுவே அவருக்குப் பிடித்த பாடமாகிவிட்டது. தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வில் தமிழ் உட்பட நான்கு பாடங்களிலும் ‘ஏ’ தேர்ச்சியுடன் 241 புள்ளிகளைப் பெற்றதில் விஷ்ணுவுக்கு மகிழ்ச்சி.

“தொடக்கத்தில் எனக்கு தமிழே தெரியவில்லை. ஆயினும், என் ஆசிரியர்கள் மற்றும் துணைப்பாட ஆசிரியர்களின் ஊக்குவிப்பால் நான் கற்றுக் கொண்டேன்,” என்கிறார் இவர்.

சந்தேகங்களைத் தெளிவுபடுத்த ஆசிரியர்களை அடிக்கடி அணுகுவார். “தயக்கத்தால் தோல்வி ஏற்படலாம் என்ற எண்ணமே என்னைத் தொடர்ந்து கேள்வி கேட்க வைத்தது,” என்றார் ஓய்வு நேரத்தில் காற்பந்து விளையாடும் இந்தச் சிறுவன்.

கொவிட்-19 கிருமிப் பரவல் சூழலில் ஆசிரியர்களை நேரடியாக அணுக முடியாததால் ஒருவித அச்சத்தை உணர்ந்ததாகக் கூறிய சுபின், பெற்றோர் தந்த ஆதரவு பெரிதும் உதவியதாகத் தெரிவித்தார். “மகனை தனியே தவிக்கவிடாமல் என் மனைவியும் நானும் அவனை கவனிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தோம்,” என்று அரசாங்க ஊழியரான அவரது தந்தை சுபின் சங்கரன் குட்டி, 45, தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!