கலைவாணி இளங்கோவிற்கு கண்ணதாசன் விருது

சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கம் ஆண்­டு­தோ­றும் 40 வய­திற்­குக் கீழ் உள்ள ஓர் இளம் படைப்­பா­ளிக்கு வழங்­கும் கவி­ய­ரசு கண்­ண­தா­சன் விருது இவ்­வாண்டு செல்வி கலை­வாணி இளங்­கோ­விற்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

1985ஆம் ஆண்டு பிறந்த செல்வி கலை­வாணி கல்­வித் துறை­யில் பணி­யாற்­று­வ­தோடு சிறு­கதை, கட்­டுரை, கவிதை, விமர்­ச­னம், நாட­கம், மேடைப் பேச்சு எனப் பல்­வேறு துறை­களில் ஆர்­வம் காட்டி வரு­கி­றார்.

சிங்­கப்­பூர் மற்­றும் வெளி­நாட்டு இதழ்­க­ளி­லும் இணை­யத்­த­ளங்­க­ளி­லும் இவ­ரது படைப்பு­கள் வெளி­யாகி இருக்­கின்­றன. பெண்­கள், இளை­யர்­கள், இலக்­கிய விழிப்­பு­ணர்வு ஆகி­ய­வற்றை மைய­மா­கக் கொண்டு பல்­வேறு கட்­டு­ரை­களை இவர் படைத்­துள்­ளார்.

உத்­த­மம் தமிழ் இணைய மாநாடு மற்­றும் அமெ­ரிக்கா, ஆஸ்­தி­ரே­லியா, தைவான், மலே­சியா, இந்­தியா, சிங்­கப்­பூர் ஆகிய நாடு­களில் நடை­பெற்ற மாநா­டு­களில் கல்வி, இலக்­கி­யம் சார்ந்த கட்­டு­ரை­கள் இவர் படைத்­துள்­ளார். தாம் எழு­து­வ­தோடு அடுத்த தலை­மு­றை­யி­ன­ருக்கு எழு­தும் ஆற்­றலை வளர்க்­க­வும் செல்வி கலை­வாணி முனை­கி­றார். பல்­வேறு தளங்­களில் மாண­வர்­களை எழுத ஊக்­கு­வித்து வரும் இவர், தொடக்­கப்­பள்ளி முதல் தொடக்­கக் கல்­லூரி மற்­றும் பல்­க­லைக்­க­ழ­கங்­கள் வரை மாண­வர்­களின் பேச்­சாற்­றலை வளர்க்க உதவி வரு­கி­றார்.

நிகழ்ச்­சி­யில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்ட தேசிய நூலக வாரி­யத்­தின் தமிழ்ப் பிரி­வுத் தலை­வர் திரு அழ­கிய பாண்­டி­யன், கண்­ண­தா­சன் விருதை வழங்­கி­ய­து­டன், இணை­யத்­தில் நடை­பெற்ற நிகழ்­வில் கண்­ண­தா­ச­னின் கவித்­தி­றன் மற்­றும் எளி­மை­யான இலக்­கி­யம் பற்றி உரை நிகழ்த்­தி­னார் .

நிகழ்ச்­சி­யில் தலைமை உரை ஆற்­றிய எழுத்­தா­ளர் கழ­கத் தலை­வர் திரு சுப அரு­ணா­ச­லம், இளை­ய­ருக்­கான கண்­ண­தா­சன் விரு­திற்கு மிகக் குறை­வான எண்­ணிக்­கை­யில் பரிந்­து­ரை­கள் வரு­வ­தா­க­வும் இனி­வ­ரும் ஆண்­டு­களில் பொது­மக்­கள் தகு­தி­பெற்ற இளை­யர்­களை அதிக எண்­ணிக்­கை­யில் பரிந்­து­ரைக்­கும்­ப­டி­யும் கேட்­டுக்­கொண்­டார்.

மேலும், இப்­போது குறிப்­பி­டப்­பட்­டுள்ள திறன்­க­ளோடு, பத்­தி­ரிகை மற்­றும் இத­ழி­யல் துறை­யில் சிறந்து விளங்­கும் இளை­யர்­க­ளை­யும் இனி­வ­ரும் ஆண்­டு­களில் பரிந்­து­ரைக்­க­லாம் என்­ப­தை­யும் அவர் அறி­வித்­தார்.

பாட்­டுத்­தி­றன் போட்­டி­யில் 14 வய­திற்கு கீழ் மற்­றும் 14 வய­திற்கு மேல் உள்ள இரண்டு பிரி­வு­க­ளி­லும் வெற்றி பெற்­ற­வர்­க­ளின் பெயர்­கள் அறி­விக்­கப்­பட்­ட­தோடு, முதல் மூன்று நிலை­களில் வந்த வெற்­றி­யா­ளர்­க­ளின் படைப்­பு­கள் காணொளி மூலம் திரை­யி­டப்­பட்­டன. 14 வய­திற்கு கீழ் உள்ள பிரி­வில் ‘நிலவே என்­னி­டம் நெருங்­காதே’ என்ற பாட­லைப் பாடி செல்­வன் ரோஷன் பரத்­வாஜ் முதல் பரிசை வென்­றார். 14 வய­திற்கு மேல் உள்ள பிரி­வில் ‘உன்னை ஒன்று கேட்­பேன்’ என்ற பாட­லைப் பாடி 200 வெள்ளி முதல் பரிசை திரு­மதி ஐயர் லட்சுமி ரவி தட்­டிச் சென்­றார்.

கவி­தாஞ்­சலி அங்­கத்­தில் கவி­ஞர் தங்க வேல்­மு­ரு­கன், கவி­ய­ர­சர் கண்­ண­தா­சன் பற்றி கவிதை படைத்­தார் .

நிகழ்­வில் சிறப்­புரை ஆற்­றிய திரைப்­பட நகைச்­சுவை மற்­றும் குணச்­சித்­திர நடி­கர், கலை­மா­மணி திரு ஜே.தம்பி இரா­மையா, “நீ நிரந்­த­ர­மா­ன­வன், நானோ நிரந்­தர மாண­வன்” என்ற தலைப்­பில் சுவை மிகுந்த சிறப்­புரை ஆற்­றி­னார்.

ஒவ்­வொரு மனி­த­னின் வாழ்க்­கை­யி­லும் கண்­ண­தா­சன் பாடல்­கள் எந்த அளவுக்குத் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றன என்­பது பற்­றி­யும் மனித மன­தில் குழப்­பங்­களும் கவ­லை­களும் வரும்­பொ­ழுது கவி­தை­களும் பாடல்­களும் எவ்­வாறு தன்­மு­னைப்­பைத் தரு­கின்­றன என்­பது பற்­றி­யும் கண்­ண­தா­சன் பாடல் வரி­க­ளைப் பாடிக்­காட்டி பார்­வை­யா­ளர்­களை அவர் பர­வ­சப்­ப­டுத்­தி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!