'ஸீ தமிழ்' நடத்தும் குறும்படப் போட்டி

'ஸீ தமிழ்' நடத்தும் குறும்படப் போட்டி

1 mins read

சிங்கப்பூர், மலேசிய மக்களுக்கான 'ஸீ ரீல்' குறும்பட போட்டியை ஏற்பாடு செய்துள்ளது ஸீ தமிழ் தொலைக்காட்சி. போட்டியில் தேர்வுபெறும் முதல் எட்டு குறும்படங்கள் Zee Tamil APAC தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பப்படும்.

15 வயதிற்கும் மேற்பட்ட சிங்கப்பூர், மலேசிய குடியிருப்பாளர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.

தமிழில், 5 முதல் 10 நிமிடங்களுக்குள் குறும்படம் இருக்க வேண்டும்.

MP4 வடிவத்தில் குறும்பட காணொளி சமர்ப்பிக்கப்பட வேண்டும். தேர்வு செய்யப்படும் எட்டு இறுதிப் போட்டியாளர்கள் தங்கள் குறும்படத்தை mov. வடிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும். குறும்படங்களை அனுப்ப வேண்டிய இறுதி நாள்: டிசம்பர் 20ஆம் தேதி.

மேல் விவரங்களுக்கு காண்க: https://www.zeetamilapac.com/zeereel

குறிப்புச் சொற்கள்