சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் 29வது நபர் உயிரிழப்பு

சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் 29வது நபர் உயிரிழப்பு

1 mins read
afc0190c-6fa0-4f86-a4b7-893d239a3749
தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை அவரது குடும்பத்தாருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

68 வயது சிங்கப்பூரர் கொவிட்-19 தொற்றால் இங்கு உயிரிழந்த 29வது நபர்.

அவருக்கு உயர் ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற பிரச்சினைகள் இருந்ததாக நேற்று சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

சிங்கப்பூரரான அவர், கடந்த மார்ச் 10ஆம் தேதி வேலை நிமித்தம் இந்தோனீசியாவுக்குச் சென்றார். இம்மாதம் 17ஆம் தேதி சிங்கப்பூருக்குத் திரும்பிய அவர் இங்கு வந்ததும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு 18ஆம் தேதி கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவரது குடும்பத்தாருக்கு தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை வேண்டிய உதவிகளைச் செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்கொவிட்-19உயிரிழப்பு