பணிப்பெண்களுக்காக நீண்டகாலம் காத்திருக்க வேண்டிய நிலைமை

கொவிட்-19 நெருக்­க­டி­யால் பல குடும்­பங்­க­ளுக்­குப் பெரும் சிக்­கல் உரு­வா­கி­யுள்­ளது. புதி­தாக வெளி­நாட்டு இல்­லப் பணிப்­பெண்­களை வேலைக்கு எடுப்­ப­தில் சிர­மம். மேலும் வீடு மாறும் பணிப்­பெண்­களின் எண்­ணிக்­கை­யி­லும் கட்­டுப்­பாடு.

ஆனால் பய­ணக் கட்­டுப்­பா­டு­கள் மட்­டுமே இச்­சிக்­கலை உரு­வாக்­க­வில்லை.

நாடா­ளு­மன்ற கேள்வி ஒன்­றுக்கு அக்­டோ­பர் 6ஆம் தேதி­யன்று மனி­த­வள அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ பதி­ல­ளித்­த­போது, கிருமி முறி­ய­டிப்­புக் கால­கட்­டத்­தில் வெளி­நாட்டு இல்­லப் பணிப்­பெண்­கள் வருகை தொடர்­பில் கிடைத்த 4,100 விண்­ணப்­பங்­களில் தமது அமைச்சு 630ஐ மட்­டுமே அனு­ம­தித்­த­தா­கக் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

இருப்­பி­னும், கட்­டுப்­பா­டு­கள் படிப்­ப­டி­யா­கத் தளர்த்­துப்­பட்டு வரு­கின்­றன. இதன் தொடர்­பில் சென்ற வெள்­ளிக்­கி­ழமை மனி­த­வள அமைச்சு அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டது.

சிங்­கப்­பூர் வரு­வ­தற்கு முன்­பாக கிருமி பரி­சோ­தனை செய்­து­கொள்­வது, வந்­த­தும் வீட்­டில் இருப்­ப­தற்­கான உத்­த­ரவை நிறை­வேற்­று­வது போன்ற பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் இருப்­ப­தால் “சிங்­கப்­பூ­ருக்கு வரும் வெளி­நாட்டு இல்­லப் பணிப்­பெண்­களின் எண்­ணிக்­கையை அதி­கரிக்­கத் தொடங்­கி­விட்­ட­தாக” அந்த அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டது.

புதி­தாக பணிப்­பெண்­களை நாடும் முத­லா­ளி­க­ளுக்­குத் தடங்­கல், அதி­க­ளவு செல­வு­கள்.

சிங்­கப்­பூ­ருக்­குள் பணிப்­பெண் நுழைய அனு­ம­திக்­கப்­பட்­டா­லும் பய­ணக் கட்­டுப்­பா­டு­க­ளால் தாம­தம் ஏற்­பட்­டுள்­ளது. சில பணிப்­பெண் முக­வர்­கள் தங்­க­ளின் கட்­ட­ணங்­களை அதி­க­ரித்­து­விட்­ட­தா­க­வும் சில முத­லா­ளி­கள் பகிர்ந்­து­கொண்­டனர்.

வீட்­டில் இருப்­ப­தற்­கான உத்­தரவு, கொவிட்-19 பரி­சோ­த­னை­கள் ஆகி­ய­வற்­றுக்­கான செலவை முத­லா­ளி­களே ஏற்­க­வேண்­டும். இது $1,700 வரை ஆக­லாம் என்று கூறப்­ப­டு­கிறது.

புதி­தாக பணிப்­பெண்­ணைக் கொண்­டு­வ­ரு­வ­தற்­குப் புதிய நிர்­வா­கச் செயல்­மு­றை­களும் நடை­மு­றைக்கு வந்­துள்­ளது. பணிப்­பெண்­ணுக்­கான வேலை அனு­ம­திச் சீட்­டுக்கு விண்­ணப்­பிப்­ப­து­டன் மார்ச் மாதம் முதல், முத­லா­ளி­களோ முக­வர்­களோ மனி­த­வள அமைச்­சி­டம் பணிப்­பெண் வரு­கைக்­கான அனு­மதி கோரி­யும் விண்­ணப்­பிக்க வேண்­டும்.

ஏற்­கெ­னவே தங்­க­ளி­டம் வேலை பார்த்த பணிப்­பெண், சிங்­கப்­பூ­ருக்­குத் திரும்­பும்­போது அவ­ருக்­குக் கிரு­மித்­தொற்று இருப்­பது உறு­தி­யா­னால், அடுத்த ஆண்டு ஜன­வரி 1ஆம் தேதி முதல் மருத்­து­வச் செல­வை­யும் முத­லா­ளியே ஏற்­க­வேண்­டும். புதி­தாக வரும் பணிப்­பெண்­களுக்கும் இந்த நிபந்­தனை பொருந்தும்.

இந்­நி­லை­யில், வீடு மாற உள்ள ஒவ்­வொரு பணிப்­பெண்­ணுக்­கும் 20 முத­லா­ளி­கள் என்ற நிலை­யில் பணிப்­பெண்­ணுக்­குத் தட்­டுப்­பா­டும் நேர்ந்­துள்­ள­தாக சில பணிப்­பெண் முக­வர்­கள் கூறி­யுள்­ள­னர்.

கொள்­ளை­நோய் வந்து அனை­வரை­யும் ஆட்டி வைப்­ப­தற்கு முன்­ன­தாக, வீடு மாறும் பணிப்­பெண்­களைப் பெரும்­பா­லான முத­லா­ளி­கள் விரும்­ப­மாட்­டார்கள். அவர்­களைச் சிக்­கல்­வா­தி­க­ளா­கத்தான் பார்ப்­பார்கள். ஆனால், தற்­போது வேறு வழி­யில்­லா­மல் அவர்­களும் நாடப்­ப­டு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!