தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருந்தகங்களில் இன்று முதல் பிசிஆர் சோதனை

1 mins read
89f1d1bc-14e1-4fef-b983-9b372b749917
படம்: ஹெல்த்வே மெடிக்கல் குரூப் -

சிங்கப்பூரில் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருந்தகங்களில் இனி யார் வேண்டுமானாலும் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கான பிசிஆர் சோதனையைச் செய்துகொள்ளலாம்.

முன்னதாக, பொதுமக்களிடையே உடல்நலமில்லாதவர்கள் குறிப்பிட்ட சில பரிசோதனை நிபந்தனைகளை நிறைவேற்றாத பட்சத்தில் பிசிஆர் சோதனையைச் செய்துகொள்ள முடியாது.

ஆனால் டிசம்பர் மாதத்திலிருந்து இச்சோதனையைச் செய்துகொள்ளும் வசதி குறிப்பிட்ட சில மருந்தகங்களில் இருக்கும்.

தானாக சோதனையைச் செய்துகொள்ள முடிவெடுப்போர், முன்பதிவு செய்துகொள்வதுடன் அதற்கான செலவுகளையும் ஏற்க வேண்டும் என்று கூறப்பட்டது; கட்டணச் சலுகையும் இருக்காது.

குறிப்புச் சொற்கள்