சிங்கப்பூரில் மேலும் இருவருக்கு கொவிட்-19; உள்ளூரில் புதிய தொற்றுச் சம்பவங்கள் இல்லை

சிங்கப்பூரில் இன்று புதிதாக இருவருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள். அதனையும் சேர்த்து இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58,230 ஆனது.

பாதிக்கப்பட்ட இருவரும் வீட்டிலேயே தங்கியிருக்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

சமூக அளவிலோ ஊழியர் தங்கும் விடுதியிலோ எவருக்கும் பாதிப்பில்லை என்றும் அமைச்சு குறிப்பிட்டது.

நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஒருவர் சாங்கி விமான நிலையத்தின் மூன்றாம் முனையத்தில் துப்புரவாளராகப் பணிபுரிபவர். 66 வயதான அம்மாது ஈஷூன் ரிங் ரோட்டில், வேலையில் இல்லாத தமது கணவருடன் தங்கியுள்ளார்.

அவருக்கு கிருமித்தொற்று திங்கள் அன்று உறுதிசெய்யப்பட்டது. நோய்த்தொற்றுக்கான எந்த அறிகுறியும் அவரிடம் தென்படவில்லை.

முன்னிலைப் பணியாளர்களுக்கு அமைச்சு இரு வாரத்துக்கு ஒருமுறை மேற்கொள்ளும் கிருமித்தொற்று பரிசோதனையில் அவருக்குத் தொற்று இருப்பது தெரியவந்தது. தொற்று உறுதியானதும் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவர் முகக்கவசம், கையுறை, பாதுகாப்பு அங்கி போன்ற பாதுகாப்பு உடைகளை வேலையிடத்தில் அணிவார் என்றும் இதற்கு முன்னர் மேற்கொண்ட சோதனைகளில் அவருக்குத் தொற்று இருக்கவில்லை என்றும் அமைச்சு கூறியது.

மேலும் செவ்வாய்க்கிழமை வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் ஒரு கிருமித்தொற்று சம்பவம் பதிவாகியுள்ளது.

தொடர்ந்து 20 நாட்களாக விடுதிகளில் கிருமித்தொற்று சம்பவங்கள் இல்லாமல் இருந்த நிலையில், அங்கு நேற்று ஒருவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழக்கமாக நடத்தப்படும் கிருமித்தொற்றுச் சோதனையின் போது ஆடவர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

ஆடவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எஞ்சிய 8 பேரும் வெளிநாடுகளிலிருந்து வந்த பிறகு, இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

கொவிட்-19 கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் சென்ற இடங்களின் பட்டியலில் சாங்கி விமான நிலைய முனையம் 3ல் உள்ள கோபிதியாம், ஹெவன்லி வாங் ஆகிய இரு உணவு நிலையங்களையும் அமைச்சு செவ்வாயன்று சேர்த்தது.

கிருமித்தொற்றுள்ளோர் சென்ற இடங்கள் குறித்த முழு விவரங்களையும் gov.sg என்ற இணையத்தளத்தில் காணலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!