அதிவிரைவு ரயில்: பிரதமர் லீ, முகைதீன் கலந்துரையாடல்

1 mins read
81d0b571-de47-4020-9504-8740ca50ad0e
பண்டார் மலேசியா நிலையத்தின் தோற்றம் ஓவியரின் கைவண்ணத்தில். படம்: EDELMAN -

கோலா­லம்­பூர்-சிங்­கப்­பூர் அதி­விரைவு ரயில் திட்­டம் (எச்­எஸ்­ஆர்) தொடர்பாக பிர­த­மர் லீ சியன் லூங்­கும் மலே­சியப் பிர­த­மர் முகை­தீன் யாசி­னும் காணொளி மூலம் நேற்று கலந்­து­ரை­யாடி­னர்.

அதிவிரைவு ரயில் சேவைத் திட்­டம் தொடர்­பில் பேச்­சு­வார்த்­தை­யில் முன்­னேற்­றம் ஏற்­பட்­டி­ருப்­பது குறித்து அவர்கள் கலந்­து­ரை­யா­டி­னர்.

அதே நேரத்­தில் இந்­தத் திட்­டத்­தில் மலே­சியா மற்­றும் சிங்­கப்­பூ­ரின் நிலைப்­பா­டு­ பற்றி அவர்­கள் புரிந்து­கொண்­ட­னர்.

இந்த இரு­த­ரப்பு ரயில் திட்­டம் தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைக்­கப்­படு­வ­தற்­கான காலக்­கெடு (டிசம்­பர் 31) நெருங்­கும் வேளை­யில் இரு நாட்­டுப் பிர­த­மர்­களும் இதுகுறித்து பேசி­னர்.

"இந்த அதி­விரைவு ரயில் திட்­டம் குறித்த மேல் விவ­ரங்­க­ளைக் கூடிய விரை­வில் இரு­த­ரப்­பும் கூட்­ட­றிக்­கை­யில் வெளி­யி­டும்," என்று இரு தலை­வர்­கள் வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­விக்கப் பட்டது. இரு நாடு­க­ளுக்­கும் இடை­யி­லான வலு­வான உறவு­களை இரு பிர­த­மர்­களும் மறு­உ­று­திப்­ப­டுத்­தி­னர். இந்த உற­வு­களை மேலும் வலுப்­ப­டுத்த அவர்­கள் விருப்­பம் தெரி­வித்­த­னர்," என்று அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டது. 350 கிலோ மீட்டர் தூர அதிவிரைவு ரயில் பாதை மூலம் சிங்கப்பூரிலிருந்து கோலாலம்பூருக்கு 90 நிமிடங்களில் சென்றுவிடலாம்.

குறிப்புச் சொற்கள்