ரத்தக் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஆடவர்

ரத்தக் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஆடவர்

1 mins read
a2bd02de-4d25-4e90-b8b8-3c117bcdb9ce
எண் 90 வாம்போ டிரை­வில் நேற்று முன்­தி­னம் அதி­காலை 1.13 மணிக்கு அந்த ஆட­வ­ருக்கு வேண்­டு­மென்றே காயம் விளை­விக்­கப்­பட்­டது குறித்து தனக்­குத் தக­வல் அளிக்­கப்­பட்­ட­தாக போலிஸ் கூறி­யது. படம்: ஸ்டோம்பிலிருந்து எடுக்கப்பட்டது -

வாம்போ டிரைவ் உணவு நிலை­யத்­தில் நேற்று முன்­தி­னம் அதி­காலை ரத்­தக் காயங்­க­ளு­டன் கண்­ட­றி­யப்­பட்ட 29 வயது ஆட­வர் ஒரு­வர் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்­டு­செல்­லப்­பட்­ட­தாக போலிஸ் நேற்று தெரி­வித்­தது.

எண் 90 வாம்போ டிரை­வில் நேற்று முன்­தி­னம் அதி­காலை 1.13 மணிக்கு அந்த ஆட­வ­ருக்கு வேண்­டு­மென்றே காயம் விளை­விக்­கப்­பட்­டது குறித்து தனக்­குத் தக­வல் அளிக்­கப்­பட்­ட­தாக போலிஸ் கூறி­யது.

"டான் டோக் செங் மருத்­து­வ­மனைக்­குக் கொண்­டு­செல்­லப்­பட்­ட­போது அந்த ஆட­வர் சுய­நினை­வு­டன் இருந்­தார்," என்று போலிஸ் தெரி­வித்­தது.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பாக சமூக ஊட­கங்­களில் வலம் வரும் புகைப்­ப­டங்­களில், ரத்­தக் காயங்­க­ளு­டன் ஆட­வர் ஒரு­வர் தரை­யில் கிடப்­பது தெரிந்­தது. அவ­ரைச் சுற்­றி­யும் அவ­ருக்­குப் பக்­கத்­தில் உள்ள மேசை­யி­லும் நாற்­கா­லி­க­ளி­லும் ரத்­தக் கறை படிந்­தி­ருந்­தது. துப்­பு­ர­வா­ளர் தரை­யைச் சுத்­தப்­ப­டுத்­து­வதை மற்­றொரு புகைப்­ப­டம் காட்­டி­யது.

இந்­தச் சம்­ப­வத்­தைத் தொடர்ந்து, அந்த உணவு நிலை­யத்­தின் ஒரு பகு­தி­யைச் சுற்றி தடுப்­பு­வேலி அமைக்­கப்­பட்­டது. சம்­ப­வம் குறித்த போலிஸ் விசா­ரணை தொடர்­கிறது.

குறிப்புச் சொற்கள்