சுடச் சுடச் செய்திகள்

ஐநாவின் முடிவு குறித்து ஏமாற்றம் தெரிவித்த சிங்கப்பூர்

மிகவும் ஆபத்தான போதைப்பொருள் பிரிவிலிருந்து குறைவான ஆபத்து பிரிவுக்கு கஞ்சாவைப் பட்டியலிட ஐநா எடுத்துள்ள முடிவுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் தனது ஏமாற்றத்தைப் பதிவு செய்துள்ளது.

ஐநா எடுத்துள்ள இந்த முடிவால் பொதுமக்களிடையே கஞ்சா குறித்து தவறான நிலைப்பாடு ஏற்படக்கூடும் என்று அது அக்கறை தெரிவித்தது.

கஞ்சா மற்றும் கஞ்சா தொடர்பான பொருட்கள் குறித்து ஐநாவிடம் ஆறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

அதில் ஒன்றை ஐநா ஏற்றுக்கொண்டது. ஏனைய ஐந்து பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டன.

கஞ்சாவை குறைவான ஆபத்து பிரிவில் பட்டியலிட 27 உறுப்பிய நாடுகள் வாக்களித்தன. இதை எதிர்த்து  25 நாடுகள் வாக்களித்தன. ஒரு நாடு வாக்
களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

“ஐநா நடத்திய வாக்களிப்பின் முடிவு எங்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது. முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை ஆதரிக்க வலுவான ஆதாரங்கள் ஏதும் இல்லை,” என்று உள்துறை அமைச்சு கூறியது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon