‘வேலை செய்தாலும் பட்டதாரிகள் கற்பதைத் தொடர வேண்டும்’

உயர்­கல்வி நிலை­யங்­களில் பட்­டம் பெற்­ற­வர்­கள் வேலை செய்­யும்­போதும் தொடர்ந்து கற்கவேண்­டும் என்று கல்வி அமைச்­சர் லாரன்ஸ் வோங் வலி­யு­றுத்தி இருக்­கி­றார்.

இதன்­மூ­லம் படிக்­கும் காலத்­தி­லேயே மாண­வர்­க­ளி­டம் அறிவைப் புகுத்துவதில் உயர்­கல்வி நிலை­யங்­க­ளுக்­கான நெருக்­கடி குறை­யும் என்று சிங்­கப்­பூர் தேசிய பல்­கலைக்­க­ழ­கத்­தின் இணை­யக் கருத்­தரங்­கில் பங்­கேற்­ற­போது அமைச்­சர் வோங் குறிப்­பிட்­டார்.

“அவ்­வப்­போது ஊக்­கு­விப்­ப­தன்­மூ­லம் ஒரு­வர் வேலை செய்­யும் காலம் முழு­வ­தும் கல்­வி­யை­யும் கற்­ற­லை­யும் நீட்­டிக்க இய­லும்,” என்­றார் அவர்.

தாங்­கள் பணி­யாற்­றும் நிறு­வனங்­கள் வழங்­கும் பயிற்­சித் திட்­டங்­கள் அல்­லது வெளி­நி­று­வ­னங்­களும் உயர்­கல்வி நிலை­யங்­களும் வழங்­கும் திட்­டங்­களில் பங்­கேற்­பதன் மூலம் தனி­ம­னி­தர்­கள் சிறப்­புப் பட்­ட­யம் போன்ற கல்­வித் தகுதி­க­ளைப் பெற முடி­யும்.

தாங்­கள் வேலை செய்­யும் காலம் முழு­வ­தும் ஆர்­வத்­து­டன் கற்­போ­ருக்கு உயர்­கல்வி நிலை­யங்­கள் ஆத­ர­வ­ளிக்க வேண்­டும் என்று திரு வோங் வலி­யு­றுத்­தி­னார்.

இத­னி­டையே, தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கம், பல­து­றைத் தொழில் கல்­லூ­ரிப் பட்­ட­தா­ரி­கள் தங்­க­ளது வாழ்க்­கைத்­தொ­ழி­லைத் தொடங்கு ­வ­தற்­குத் தேவை­யான தேர்ச்­சி­களை­யும் திறன்­க­ளை­யும் பெற்­று இருப்பதை உறு­திப்­ப­டுத்­திட கல்வி அமைச்சு இன்­னும் என்ன செய்­ய­லாம் என்­பது பற்றி ஆராய, கல்வி இரண்­டாம் அமைச்­சர் மாலிக்கி ஒஸ்­மான் தலை­மை­யில் மறு­ஆய்வு நட­வ­டிக்கை இடம்­பெ­றும். என திரு வோங் அறி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!