கடன்முதலை தொடர்பான குற்றங்களைப் புரிந்ததற்காக 22 வயது ரஷ்ய ஆடவருக்கு 14 மாத சிறைத் தண்டனையும் $30,000 அபராதமும் விதிக்கப்பட்டன.
சிங்கப்பூரில் பட்டயக் கல்வி மாணவராக இருக்கும் விளாடிமிர் டெனிலென்கோ கடன்முதலை சார்பாக கடன் வாங்கியவர்களுக்குத் தொல்லை விளைவித்ததாக தெரிவிக்கப்ப்டடது.
விளாடிமர் பயிவலும் பள்ளி பற்றியோ அவர் எந்தத் துறை மாணவர் என்பதை பற்றியோ நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கவில்லை.
தொல்லை விளைவித்ததையும் சட்டவிரோதமாகக் கடன் கொடுக்க கடன்முதலைக்கு உதவியதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் கடன்முதலை ஒருவரிடமிருந்து விளாடிமிர் $400 கடன் வாங்கியதாகவும் அதை அவரால் திருப்பிக் கொடுக்க முடியாமல் போனது என்றும் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தன.
எனவே, அந்தக் கடன்முதலையின் சார்பாக அவரிடம் கடன் வாங்கிய திருப்பிக் கொடுக்காதோருக்குத் தொல்லை கொடுக்க விளாடிமியர் முன்வந்ததாக தெரிவிக்கப்பட்டது.


