சுடச் சுடச் செய்திகள்

கிருமி: மீட்டுக்கொள்ளப்பட்ட மிடோவ்ஸ் தண்ணீர் போத்தல்கள்

மிடோவ்ஸ் (Meadows) குடி தண்ணீர் போத்தல்களில் ஒரு வகை பாக்டீரியா கிருமி காணப்பட்டதை அடுத்து அந்த நிறுவனத்தின் போத்தல் குடிநீர் மீட்டுக்கொள்ளப்படுகிறது.

சிங்கப்பூர் உணவு முகவை வழக்கமாக நடத்தும் பரிசோதனையின்போது, அந்த நிறுவனத்தின் போத்தல் குடிநீரில் கிருமி காணப்பட்டது.

அந்த வகை பாக்டீரியா கிருமி பொதுவாக மண், சாக்கடை, மலம் ஆகியவற்றில் காணப்படும். 

அந்த நிறுவனத்தின் 1.5 லிட்டர்  போத்தல்களை யாரேனும் வாங்கி இருந்தால் அந்த நீரை குடிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ள இந்த முகவை, அந்த தண்ணீரைக் குடித்த யாருக்காவது உடல் நலன் குறித்து கவலை இருந்தால் அவர்கள் மருத்துவரைப் பார்க்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

மிடோவ்ஸ் குடி தண்ணீர் போத்தல்கள் ஜெயண்ட், கோல்டு ஸ்டோரேஜ் ஆகிய பேரங்காடிகளில் விற்கப்படுபவை. 

போத்தல்களில் காலாவதி தேதி 2022 நவம்பர் 9 என்று இருக்குமானால் அவை கிருமி இருக்கும் வாய்ப்புள்ளவை என்றும் அவை ஜெயண்ட் பேரங்காடிகளில் மட்டும் விற்கப்பட்டவை என்றும் தெரிவிக்கப்பட்டது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon