ஏழை நாடுகளுக்கும் கொவிட்-19 தடுப்பூசி கிடைக்க வழி செய்யும் திட்டத்துக்கு US$5 மி. வழங்கியது சிங்கப்பூர்

ஏழை நாடுகளுக்கும் கொவிட்-19 தடுப்பூசி கிடைக்க வழி செய்யும் திட்டத்துக்கு US$5 மி. வழங்கியது சிங்கப்பூர்

2 mins read
4a7f5dd6-5306-49a1-8163-16cab8817f93
-

கொவிட்-19 தடுப்­பூசி மருந்து, எந்த ஓர் ஏழை நாட்­டுக்­கும் கிடைக்­கா­மல் போகும் நிலைமை வரா­மல் இருக்க, ஐந்து மில்­லி­யன் அமெ­ரிக்க டாலரை (S$6.6 மி.) அனைத்­து­லகத் திட்­டம் ஒன்­றுக்கு சிங்­கப்­பூர் உறு­தி­ய­ளித்­துள்­ளது.

இத­னால், போது­மான அள­வில் கொவிட்-19 தடுப்­பூசி மருந்து உற்­பத்தி செய்­யப்­ப­டு­வ­தும் உறு­திப்­படுத்­தப்­படும்.

'கொவேக்ஸ்' எனப்­படும் இந்த அனைத்­து­லகத் திட்­டத்­தின்­கீழ் நிறு­வ­னங்­கள் போது­மான அள­வில் தடுப்­பூ­சி­யைத் தயா­ரிப்­ப­தும் வளர்ந்­து­வ­ரும் நாடு­க­ளுக்கு தடுப்­பூசி கிடைப்­ப­தும் உறு­தி­செய்­யப்­படும். 2021ஆம் ஆண்­டி­று­திக்­குள் அனைத்­து­லக அள­வில் இரண்டு பில்­லி­யன் தடுப்­பூசி மருந்­து­க­ளைச் சேக­ரித்து, அவற்­றைச் சம­மா­கப் பிரித்து, விநி­யோ­கிப்­பதே இத்­திட்­டத்­தின் இலக்­கா­கும்.

இதற்­காக தடுப்­பூசி தயா­ரிக்­கும் பல நிறு­வ­னங்­களை ஆராய்ச்சி, உரு­வாக்­கம், உற்­பத்தி ஆகிய அம்­சங்­களில் ஆத­ரித்து விலை குறித்து பேச்­சு­வார்த்தை நடத்­தப்­படும்.

இத்­திட்­டம் வழி 92 குறைந்த வரு­மான நாடு­க­ளுக்கு கிரு­மித்­தொற்­றுக்­கான தடுப்­பூசி மருந்து கிடைக்­கும் என்று சுகா­தார அமைச்­சும் வெளி­யு­றவு அமைச்­சும் தெரி­வித்­துள்­ளன.

கம்­போ­டியா, இந்­தோ­னீ­சியா, லாவோஸ், மியன்­மார், பிலிப்­பீன்ஸ், வியட்­னாம் ஆகிய ஆசி­யான் நாடு­களும் உல­கின் சில சிறிய மாநிலங்­களும் இப்­பட்­டி­ய­லில் அடங்­கும் என்று அமைச்­சு­கள் கூறின.

நவம்­பர் 25ஆம் தேதி நில­வரப்­படி, திட்­டத்­திற்­கான 97 நிதி­யளிக்­கும் பங்­கேற்­பா­ளர்­களில் சிங்­கப்­பூ­ரும் ஒன்று.

இந்த வச­தியை ஏற்­ப­டுத்­திக் கொடுக்­கும் அனைத்துலக பங்­கா­ளி­களில் உலக சுகா­தார நிறு­வ­ன­மும் அடங்­கும்.

பொதுச் சுகா­தா­ரம், சமூ­கம், பொரு­ளி­யல் ஆகிய கூறு­களில் உள்­ளூ­ரி­லும் வெளி­நா­டு­க­ளி­லும் குறிப்­பி­டத்­தக்க தாக்­கத்தை இக்­கொள்ளை நோய் ஏற்­ப­டுத்­தி­விட்­ட­தாக இரண்டு அமைச்­சு­களும் தெரி­வித்­தன.

"எல்­லை­களை கிருமி மதிப்­ப­தில்லை, அனை­வ­ரும் பாது­காப்பு பெறும்­ வரை யாருமே பாது­காப்­பாக இல்லை.

"பாது­காப்­பான, பயன் அளிக்­கக்­கூ­டிய தடுப்­பூசி மருந்­து­களை வெற்­றி­க­ர­மாக உரு­வாக்­கு­வதே, கொள்ளை நோயை முறி­ய­டிக்­கும் பய­ணத்­தின் முக்­கிய படி," என்று அமைச்­சு­கள் தெரி­வித்­தன.

இந்த முயற்சி கைகூட, அனைத்­து­லக பங்­கா­ளி­க­ளு­டன் தொடர்ந்து அணுக்­க­மா­கச் செயல்­படும் என்று அமைச்­சு­கள் கூறின.

இத­னால் பல­த­ரப்பு முயற்­சி­யில் தடுப்­பூசி மருந்து உரு­வா­வ­து­டன் கொள்ளை நோய்க்கு எதி­ராக அனைத்­து­லக செயல்­பாடு ஒன்­றும் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக அவை குறிப்­பிட்­டன.

குறிப்புச் சொற்கள்