சிங்கப்பூரில் மேலும் 13 பேருக்கு கொவிட்-19; உள்ளூர் சமூகத்தில் ஒரு சம்பவம்

சிங்கப்பூரில் மேலும் 13 பேருக்கு கொவிட்-19; உள்ளூர் சமூகத்தில் ஒரு சம்பவம்

1 mins read
64c17045-10bf-46b0-95e0-c45f4fc9609e
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (டிசம்பர் 5) புதிதாக 13 பேருக்கு கொவிட்-19 தொற்று பதிவான நிலையில், மொத்த எண்ணிக்கை 58,254 ஆகியுள்ளது.

இன்று உள்ளூர் சமூகத்தில் ஒருவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஏற்கெனவே தனிமைப் படுத்தப்பட்டிருந்தவர் என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

எஞ்சிய 12 பேரில் 11 பேர் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள். ஒருவர் மட்டும் 'வர்த்தகப் பயண அட்டை' உடன் இந்தோனீசியாவுக்கு வேலை நிமித்தம் சென்று திரும்பிய சிங்கப்பூரர்.

நவம்பர் 28ஆம் தேதி இங்கு வந்த பிறகு பிசிஆர் பரிசோதனைக்கு உட்பட்ட அவர், வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். கடந்த 29ஆம் தேதி வெளியான பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதியானாலும், கடந்த புதன்கிழமை அவருக்கு கிருமித்தொற்று அறிகுறிகள் தென்பட்டன. பின்னர் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட ஒரு சிங்கப்பூரர், ஒரு நிரந்தரவாசி, குறுகியகால வருகை அனுமதியுடன் வந்த ஒருவர் என மூவரும் இந்தியாவிலிருந்து திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்