வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த 12 பேருக்கு கிருமித்தொற்று

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த 12 பேருக்கு கிருமித்தொற்று

1 mins read
32343204-23d0-40dd-a2fc-358482eda220
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் புதிதாக 12 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று இன்று (டிசம்பர் 8) உறுதி செய்யப்பட்டது.

அவர்களையும் சேர்த்து இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 58,285ஆக உள்ளது.

புதிதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 12 பேரும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள்.

அவர்கள் இங்கு வந்தவுடன் வசிப்பிடத்தில் இருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியிலோ சமூக அளவிலோ எவருக்கும் இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்படவில்லை.

இதற்கிடையே, சிங்கப்பூரில் நேற்று 13 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

அவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள். அவர்களுக்கும் வசிப்பிடத்தில் இருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அவர்களில் ஒருவர் சிங்கப்பூரர், ஒருவர் நிரந்தரவாசி, 10 பேர் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள், ஒருவர் சார்ந்திருப்போர் அட்டை வைத்திருப்பவர்.

குறிப்புச் சொற்கள்