ஆய்வு: மனிதவளத் துறையில் சில வேலைகளை ‘ரோபோ’க்கள் ஏற்கக்கூடும்

மனி­த­வளத் துறை­யில் மேலா­ளர் வேலை­கள் சில­வற்றை வரும் காலத்­தில் ரோபோக்­கள் எனப்­படும் இயந்­திர மனி­தர்­கள் ஏற்று நடத்தும் காலம் வர­லாம் என்று ஆய்வு ஒன்று கூறு­கிறது.

மனி­த­வள அமைச்­சும் ‘இன்ஸ்­டி­டி­யூட் ஃபார் ஹியூ­மன் ரிசோர்ஸ் புரபஃபெஷனல்ஸ்’ எனப்­படும் மனி­த­வள நிபு­ணத்­து­வக் கழ­கம் ஒன்­றும் இணைந்து ஆலோ­சனை நிறு­வ­ன­மான வில்­லிஸ் டவர்ஸ் வாட்­சன் மூலம் மேற்­கொண்ட ஆய்­வில் இது தெரி­ய­வந்­துள்­ளது.

அதன்­படி, மனி­த­வளத் துறை­யின் 27 பணி­களில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வில் அடுத்த மூன்­றி­லி­ருந்து ஐந்து ஆண்டுகால­கட்­டத்­தில் பல்­வேறு நிலை­களில் ெதாழில்­நுட்­பத்­தின் தாக்­கம் இருக்­கும் என்று ஆய்வு கூறு­கிறது.

நேற்று வெளி­யி­டப்­பட்ட இந்த ஆய்­வின் முடி­வி­லி­ருந்து, மனி­த­வளத் துறை­யின் எட்டு பணி­கள் பாதிக்­கப்­படும் ஆபத்து இருப்­ப­தா­கத் தெரி­கிறது.

இவை யாவும் கீழ்­நி­லை­யி­லுள்ள திறன் நிர்­வா­கம், திறன் மதிப்­பீடு அதற்­கேற்ற சன்­மா­னம், ஆகி­ய­வற்­று­டன் நிறு­வன மேம்­பாடு போன்ற பிரி­வு­களில் தொழில்­நுட்­பத்­தின் பாதிப்பு தெரிய வர­லாம் என்று கூறப்­ப­டு­கிறது.

அதற்­குக் கார­ணம், இயந்­திர மனி­தத் துறை­யில், நடை­மு­றை­களைத் தானி­யக்­க­ம­ய­மாக்­கு­வது, இயந்­தி­ரக் கல்வி முறை போன்­ற­வற்­றில் ஏற்­பட்­டுள்ள முன்­னேற்­றம் என்­றும் விளக்­க­ம­ளிக்­கப்­ப­டு­கிறது.

இதில் மீத­முள்ள 16 பணி­கள் மேலா­ளர் அல்­லது தலை­மைத்­துவ பிரிவு தொடர்­பா­னவை.

இவை தொழில்­நுட்­பம் மூலம் மேம்­பா­டு காணும் என்­ப­தால் இவற்­றில் பணி­பு­ரி­வோர் அதற்­கேற்­ற­வாறு தரவு பகுப்­பாய்வு திறன்­க­ளைப் பெற்­றி­ருக்க வேண்­டும் என்று கூறப்­ப­டு­கிறது.

இதில் தானி­யக்க முறை­யினால் பெரிய அளவு பாதிப்பு இல்­லாத வேலை­களைக் கூறவேண்டும் என்­றால் அவை, திற­னா­ளர் நிர்­வா­கத் தலை­மைப் பொறுப்­பி­லிருப்­ப­வர், மனி­த­வள வர்த்­தக பங்­கா­ளித்­துவ பொறுப்­பில் இருப்­ப­வர், நிறு­வ­னத்­தின் வளர்ச்சி குறித்த மேலா­ளர் பொறுப்­பில் இருப்­ப­வர் ஆகி­ய­வையே.

இந்நிலையில், தொழில்­நுட்ப வளர்ச்­சி­யால் மனி­த­வளத் துறையில் புதிய வேலை­கள் உரு­வா­கும் என்­றும் ஆய்வு தெரி­விக்­கிறது. இவை மனி­த­வள தரவு பகுப்­பாய்­வா­ளர் பொறுப்­பிலிருப்பது­போல் அதிக திறன் தேவைப்­படும் பணி­கள் என்று ஆய்வு கோடி காட்­டு­கிறது.

சிங்­கப்­பூ­ரில் மனி­த­வள நிபு­ணர் ­களாக கிட்­டத்­தட்ட 48,000 பேர் உள்­ள­னர். இவர்­களில் 90 விழுக்­காட்­டி­னர் நிபு­ணர்­கள், மேலா­ளர்­கள், நிர்­வா­கி­கள், தொழில்­நுட்­பர் பிரி­வைச் சேர்ந்­த­வர்­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!