கெத்தே-கோல்டன் வில்லேஜ் திரையரங்கு நிறுவனங்கள் இணைக்கப்படும் சாத்தியம்

கெத்தே - கோல்­டன் வில்­லேஜ் திரை­ய­ரங்­கு­கள் இணைக்­கப்­படும் சாத்­தி­யம் உரு­வா­கி­யுள்­ளது.

இதன் தொடர்­பில், சிங்­கப்­பூ­ரில் கோல்­டன் வில்­லேஜ் திரை­ய­ரங்­கு­களை நடத்தி வரும் ‘ஸ்கை கோல்­டன் ஹார்­வெஸ்ட் என்­டர்­டெ­யின்­மென்ட் (ஹோல்­டிங்ஸ்) லிமி­டெட் (ஓஎஸ்­ஜி­எச்)’ நிறு­வ­னத்­து­டன் முதற்­கட்ட உடன்­பாடு எட்­டப்­பட்­டு உள்­ள­தாக கெத்தே திரை­ய­ரங்­கு­களின் உரி­மை­யா­ள­ரான ‘எம்­எம்2 ஏஷியா’ நிறு­வ­னம் தெரி­வித்து இருக்­கிறது.

அந்த உடன்­பாட்­டின்­படி, தங்­களது கூட்­டுத்­தொ­ழி­லில் அதிக முத­லீடு செய்­யும் வகை­யில் புதிய முத­லீட்­டா­ளர்­களை ஈர்க்க அவ்­விரு நிறு­வ­னங்­களும் இலக்கு கொண்டு உள்­ளன.

இவ்­வி­ணைப்பு சாத்­தி­ய­மா­னால், சிங்­கப்­பூ­ரின் ஆகப் பெரிய திரை அரங்­குத் தொழில் நடத்­து­ந­ராக அக் கூட்டு நிறு­வ­னம் உரு­வெ­டுக்­கும்.

சிங்­கப்­பூர் பங்­குச்­சந்­தை­யில் இடம்­பெற்­றுள்ள எம்­எம்2 ஏஷியா நிறு­வ­னம் ‘கெத்தே’ பெய­ரில் சிங்­கப்­பூ­ரில் எட்­டுத் திரை­ய­ரங்கு வளா­கங்­க­ளை­யும் மலே­சி­யா­வில் 14 திரை­ய­ரங்கு வளா­கங்­க­ளை­யும் கொண்­டுள்­ளது. அத்­து­டன், திரைப்­பட விநி­யோ­கத் தொழி­லி­லும் இணை­ய­வழி ஒளி­ப­ரப்­புத் தொழி­லி­லும் அது ஈடு­பட்டு வரு­கிறது.

ஹாங்­காங் பங்­குச்­சந்­தை­யில் இடம்­பெற்­றுள்ள ‘ஓஎஸ்­ஜி­எச்’ நிறு­வனம், சிங்­கப்­பூ­ரில் 14 கோல்­டன் வில்­லேஜ் திரை­ய­ரங்கு வளா­கங்­களைக் கொண்­டுள்­ளது. ஒட்­டு­மொத்­தத்­தில், ஹாங்­காங், தைவான், சிங்­கப்­பூர் ஆகிய நாடு­களில் 35 திரை­ய­ரங்கு வளா­கங்­களை அந்த ­நி­று­வ­னம் கொண்­டி­ருக்­கிறது.

கொவிட்-19 நோய்ப் பர­வ­லால் திரை­ய­ரங்­குத் தொழில் கடும் சவால்­க­ளைச் சந்­தித்து வரும் நிலை­யில், இவ்­விரு திரை­ய­ரங்கு நிறு­வ­னங்­க­ளின் இணைப்பு அதிக நிதி, செயல்­பாட்டு நிலைத்­தன்­மையை வழங்­கும் என்று எம்­எம்2 ஏஷியா நிறு­வ­னம் தெரி­வித்­து உள்ளது.

ஆயி­னும், இந்த உடன்­பாடு பல ஒழுங்­கு­மு­றைத் தடைக்­கற்­களை எதிர்­கொண்­டுள்­ளது. இணைப்பு நட­வ­டிக்­கைக்கு இரு நிறு­வ­னங்­களின் பங்­கு­தா­ரர்­களும் ஒப்­புக்­கொள்ள வேண்­டும்; சிங்­கப்­பூர், ஹாங்­காங் பங்­குச்­சந்­தை­களும் சிங்­கப்­பூர் போட்­டித்­தன்மை, பய­னீட்­டா­ளர் ஆணை­யம் உள்­ளிட்ட அர­சாங்க அமைப்­பு­களும் ஒப்­பு­தல் அளிக்க வேண்­டும்.

அடுத்த ஆண்டு இறு­திக்­குள் உறு­தி­யான உடன்­ப­டிக்கை எட்­டப்­படா­விடில் அல்­லது முன்­மொ­ழி­யப்­பட்ட ஒப்­பந்த விதி­மு­றை­கள் பூர்த்தி செய்­யப்­ப­டா­விட்­டால் முதற்­கட்­ட­மாக எட்­டப்­பட்ட உடன்­பாடு ரத்­தா­கி­வி­டும்.

இவ்­வாண்­டின் முதல் ஆறு மாதங்­களில், சிங்­கப்­பூர் கோல்­டன் வில்­லேஜ் திரை­ய­ரங்கு வர்த்­த­கம் $2.9 மில்­லி­யன் இழப்­பைச் சந்­தித்­ததாக ‘தி எட்ஜ் சிங்­கப்­பூர்’ குறிப்­பிட்­டது.

அதே­போல, கடந்த செப்­டம்­பர் 30ஆம் தேதி வரைக்குமான ஆறு மாத காலத்­தில் எம்­எம்2 ஏஷியா நிறு­வ­னத்­திற்கு $22.4 மில்­லி­யன் நிகர இழப்பு ஏற்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!