சிங்கப்பூரில் இன்று (டிசம்பர் 11) விடுதியில் தங்கியிருக்கும் வெளிநாட்டு ஊழியர் ஒருவருக்கு புதிதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டிலிருந்து வந்த எழுவருக்கும் கிருமித்தொற்று உறுதியானது. அவர்கள் இங்கு வந்த பிறகு அவர்களுக்கு வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, அல்லது அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சமூக அளவில் யாருக்கும் கிருமித்தொற்று உறுதி செய்யப்படவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. இதனுடன் சிங்கப்பூரில் கிருமி தொற்றியவர்களின் எண்ணிக்கை 58,305 ஆனது.
இதற்கிடையில், நேற்று கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் இருவர் சிங்கப்பூர் இளையர்கள். 18, 19 வயதுகளில் இருக்கும் இருவரும் பிரிட்டனில் இருந்து வந்தவர்கள். அவர்களைத் தவிர்த்து, மேலும் இரு சிங்கப்பூரர்கள், ஒரு நிரந்தரவாசி, சார்ந்திருப்போர் அட்டை வைத்திருக்கும் ஒருவர் ஆகிய நால்வருக்கு கிருமித்தொற்று உறுதியானது.

