HER2 பரிசோதனையில் தவறான முடிவு; 90 பேருக்கு ‘தேவையில்லாத' மார்பகப் புற்றுநோய் சிகிச்சை

மார்­ப­கப் புற்­று­நோ­யா­ளி­க­ளுக்­கான சிகிச்­சைத் தெரி­வு­களை வழங்­கும் ஒரு பரி­சோ­தனை தவ­றான முடி­வு­க­ளைத் தெரி­யப்­ப­டுத்­தி­ய­தால், கிட்­டத்­தட்ட 90 நோயா­ளி­க­ளுக்கு 2012ஆம் ஆண்டு முதல் தேவை­யில்­லாத சிகிச்சை அளிக்­கப்­பட வழி வகுத்­துள்­ளது.

தவ­றான சிகிச்சை பெற்ற நோயா­ளி­க­ளுக்கு இத­யப் பிரச்­சி­னை­கள், வயிற்­றுப்­போக்கு, நடுக்­கம், காய்ச்­சல் போன்ற பாதிப்­பு­கள் ஏற்­பட்­டி­ருக்­கக்­கூ­டும்.

இது குறித்து நேற்று அறிக்கை வெளி­யிட்ட கூ டெக் புவாட் மருத்­து­வ­மனை, சுமார் 180 நோயா­ளி­களுக்கு தவ­றான சிகிச்சை முடி­வு­கள் அளிக்­கப்­பட்­டி­ருக்­க­லாம் என்று மதிப்­பிட்­டுள்­ள­தா­கத் தெரி­வித்­தது.

அவர்­க­ளுக்­குத் தவ­று­த­லாக வழங்­கப்­பட்ட மனித மேல்­தோல் வளர்ச்­சிக் காரணி ஏற்பி 2 (HER2) பரிசோதனை தவ­றான முடி­வு­க­ளுக்­குக் கார­ணம் என்று ஆரம்­பக்­கட்ட புல­னாய்­வு­கள் தெரி­விக்­கின்­றன.

புற்­று­நோய் பாதிப்பு எந்த அள­வுக்கு உள்­ளது என்­பதை மருத்­து­வர்­கள் கண்­ட­றிந்து அதற்­கேற்­றாற் போல் சரி­யாக சிகிச்சை அளிக்க ‘ஹெர்2’ பரி­சோ­தனை உதவும்.

இந்த விவ­கா­ரம் வெளிக்­கி­ளம்­பிய பிறகு, 2012ஆம் ஆண்­டி­லி­ருந்து பாதிக்­கப்­பட்ட நோயா­ளி­களை மருத்­து­வ­மனை அடை­யா­ளம் கண்டு, முன்பு அவர்­க­ளுக்கு செய்த பரி­சோ­தனை மாதி­ரி­களை வெளிப்­புற ஆய்­வுக்­கூ­டங்­க­ளுக்கு அனுப்பி விரை­வாக மறு­சோ­தனை செய்ய உத்­த­ர­விட்­டுள்­ளது.

மறு­சோ­தனை முடி­வு­களில் சில வந்­து­விட்­ட­தால், சம்­பந்­தப்­பட்ட நோயா­ளி­க­ளைத் தொடர்­பு­கொள்­ளும் பணியை மருத்­து­வ­மனை தொடங்கி, அவர்­க­ளுக்கு சிகிச்­சை­ய­ளிக்­கும் மருத்­து­வர்­க­ளுக்­கும் ஆத­ர­வ­ளிக்­கிறது.

நோயா­ளி­யின் பாது­காப்பை உறுதி­ செய்ய மருத்­து­வ­மனை தனது ஆய்­வுக்­கூ­டத்­தில் ‘ஹெர்2’ பரி­சோ­த­னையை நடத்­து­வதை நிறுத்­திக் கொண்­டுள்­ளது.

இச்­சம்­ப­வம் குறித்து தேசிய சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் குழு­மத்­துக்கு கடந்த மாதம் 22ஆம் தேதி­யும் சுகா­தார அமைச்­சுக்கு கடந்த மாதம் 24ஆம் தேதி­யும் தெரி­யப்­படுத்தி விட்­ட­தாக கூ டெக் புவாட் மருத்­து­வ­மனை கூறி­யது.

இச்­சம்­ப­வம் குறித்து விசா­ரிக்க தேசிய சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் குழு­மம் ஒரு சுயேச்சை ஆய்­வுக் குழுவை அமைத்­துள்­ளது.

“பாதிக்­கப்­பட்ட எல்லா நோயா­ளி­கள், அவர்­களின் குடும்­பங்­கள், அவர்­க­ளுக்­குச் சிகிச்சை அளித்த புற்­று­நோய் மருத்­து­வர்­கள் ஆகி­யோ­ருக்கு எங்­கள் ஆழ்ந்த வருத்­தத்­தைத் தெரி­வித்­துக்­கொள்­கிறோம். அவர்­க­ளுக்­குத் தேவைப்­படும் எல்லா உத­வி­க­ளை­யும் ஆத­ர­வை­யும் வழங்கி, அவர்­களை சிறந்த முறை­யில் கவ­னித்­துக்­கொள் வோம்,” என்­றார் கூ டெக் புவாட் மருத்­து­வ­ம­னை­யின் தலைமை நிர்­வாகி திரு­மதி சியூ குவீ தியாங்.

இச்­சம்­ப­வம் குறித்து கருத்­து­ரைத்த சுகா­தார அமைச்சு, “இச்­சம்­ப­வத்தை நாங்­கள் கடு­மை­யா­கப் பார்க்­கி­றோம். மருத்­துவ அமைப்பு ­க­ளின் ஆய்­வுக்­கூ­டங்­களில் பரி­சோ­தனை முறை­க­ளின் நம்­ப­கத்­தன்மை அடிக்­கடி சரி­பார்க்­கப்­பட வேண்­டும். பரி­சோ­தனை நடை­முறை­களில் விதி­மீ­றல்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டால் சம்­பந்­தப்­பட்ட மருத்­துவ அமைப்பு மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்,” என்று கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!