சிங்கப்பூரில் கொவிட்-19 எச்சில் பரிசோதனை சாதனத்துக்கு சுகாதார அறிவியல் ஆணையம் அங்கீகாரம்

சிங்கப்பூரில் கொவிட்-19 எச்சில் பரிசோதனை சாதனத்துக்கு சுகாதார அறிவியல் ஆணையம் அங்கீகாரம்

1 mins read
64a69a32-bde1-4619-8c8e-91f92a9b0a87
மூக்கில் இருந்து எடுக்கப்படும் திரவத்திற்குப் பதிலாக ஒருவரின் எச்சிலை பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளும் வாய்ப்பை இது வழங்குகிறது. படங்கள்: ஏ* ஸ்டார், அட்வான்ஸ்டு மெட்டெக் ஹோல்டிங்ஸ் -

சிங்கப்பூரில் புதிய கொவிட்-19 பரிசோதனை சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டு இருக்கிறது.

அது மூக்கில் இருந்து எடுக்கப்படும் திரவத்திற்குப் பதிலாக ஒருவரின் எச்சிலை பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது.

'ரெசலூட் 2.0' என்ற அந்த சாதனத்தை ஏ ஸ்டார் (A*Star) நிறுவனமும் 'டிஎஸ்ஓ' நேஷனல் லேபரட்டரிஸ்' என்ற நிறுவனமும் ஜூலையில் உருவாக்கின.

இதை 'அட்வான்ஸ்டு மெட்டெக் ஹோல்டிங்ஸ்' என்ற நிறுவனம் தயாரித்து விநியோகிக்கும்.

சிங்கப்பூரில் முதல் கொவிட்-19 எச்சில் பரிசோதனைக்கு சுகாதார அறிவியல் ஆணையம் அங்கீகாரம் அளித்து இருப்பதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்