சிங்கப்பூரில் மேலும் 7 பேருக்கு கொவிட்-19; மொத்த எண்ணிக்கை 58,320

சிங்கப்பூரில் மேலும் 7 பேருக்கு கொவிட்-19; மொத்த எண்ணிக்கை 58,320

1 mins read
9060524a-a080-4c7c-9d80-d30dc460f031
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (டிசம்பர் 13) புதிதாக 7 பேருக்கு கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனையும் சேர்த்து இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58,320 ஆகியுள்ளது.

இந்த 7 பேரும் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

உள்ளூர் சமூகத்திலோ அல்லது ஊழியர் தங்கும் விடுதியிலோ இன்று யாருக்கும் கிருமித்தொற்று பதிவாகவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்தது.

நேற்று சிங்கப்பூரில் 8 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின. அவர்கள் அனைவரும் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பிறகு இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

இந்தியா, நேப்பாளம், பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்து இங்கு வந்த 5 சிங்கப்பூரர்கள், ஒரு நிரந்தரவாசி ஆகியோருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.

அமெரிக்கா, மாலத்தீவு ஆகியவற்றிலிருந்து வந்த சார்ந்திருப்போர் அட்டை வைத்திருக்கும் இருவருக்கும் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த 8 பேரும் 19 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.

குறிப்புச் சொற்கள்