காற்றழுத்த துப்பாக்கியைத் தயாரித்து, பயன்படுத்தியவருக்கு 18 மாத சிறை, அபராதம்

காற்றழுத்த துப்பாக்கியைத் தயாரித்து, பயன்படுத்தியவருக்கு 18 மாத சிறை, அபராதம்

1 mins read
3e11424a-4490-473f-be59-1aa109d8dbc5
இரும்பு உருண்டைகளைப் பாய்ச்சக்கூடிய காற்றழுத்த துப்பாக்கியைத் தயாரித்தற்காக 64 வயது லீ கெங் ஹீ என்பவருக்கு 18 மாத சிறை, $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இரும்பு உருண்டைகளைப் பாய்ச்சக்கூடிய காற்றழுத்த துப்பாக்கியைத் தயாரித்தற்காக 64 வயது லீ கெங் ஹீ என்பவருக்கு 18 மாத சிறை, $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

லீ கெங் ஹீ, துப்பாக்கியின் வரம்பை சோதிக்க ஆரம்பத்தில் தனது ஜூரோங் வெஸ்ட் வீட்டிலிருந்து இரும்பு உருண்டைகளைக் கொண்டு மரங்களில் சுட்டார்.

அதிகம் சக்தி வாய்ந்த மூன்றாவது துப்பாக்கியை உருவாக்கியதும் அக்கம்பக்க அடுக்குமாடிகளைக் குறிவைத்து, சில வீடுகளின் சன்னல்களை உடைத்தார்.

உரிமம் இல்லாமல் ஆயுதம் தயாரித்தது, குடியிருப்பு அடுக்குமாடிகளில் இரும்பு உருண்டைகளைப் பயன்படுத்தி சுட்டது ஆகிய குற்றங்களுக்காக லீக்கு சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது.

தண்டனையின்போது, தொடர்புடைய மேலும் இரு குற்றச்சாட்டுகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன.

துணை தற்காப்பு வழக்கறிஞர் ரெஜினா லிம், லீ தயாரித்து, அடுக்குமாடிகளைக் குறிவைத்துச் சுட்ட காற்றழுத்தத் துப்பாக்கி ஆபத்தானது என்று விவரித்தார்.

இரும்பு உருண்டைகள் 77 மீட்டர் தொலைவிலிருந்து கண்ணாடியை உடைக்க முடிந்தது என்றும் லீ 10 மாதங்களில் பல துப்பாக்கிகளை உற்பத்தி செய்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

லீ தனது துப்பாக்கிகளைப் பயன்படுத்தி 200க்கும் மேற்பட்ட இரும்பு உருண்டைகளைச் சுட்டதாகக் கூறப்பட்டது.

லீ தமது செயலுக்காக வருத்தப்படுவதாகவும், "தாமாகவே தம்மை மாற்றிக்கொண்டதாகவும்," அவரது வழக்கறிஞர் என்றும் வாதிட்டார்.

குறிப்புச் சொற்கள்