சிங்கப்பூரில் மேலும் 12 பேருக்கு தொற்று; சிங்கப்பூருக்கு வந்த ஒரு வயது சிறுவனுக்கு கொவிட்-19

சிங்கப்பூரில் மேலும் 12 பேருக்கு தொற்று; சிங்கப்பூருக்கு வந்த ஒரு வயது சிறுவனுக்கு கொவிட்-19

1 mins read
817d519d-7a7a-4aa0-bcaf-5c2b39f0a155
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று புதிதாக 12 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள்.

சிங்கப்பூரில் தரையிறங்கியதும் அவர்கள் அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டதாக சுகாதார அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

சமூக அளவில் கிருமித்தொற்று இல்லை என்றும் தங்கும் விடுதிகளில் தங்கியிருக்கும் ஊழியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என்றும் அறிக்கை குறிப்பிட்டது.

இன்றைய புதிய சம்பவங்களுடன் சேர்த்து சிங்கப்பூரில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58,353.

ஒரு வயது சிறுவனும் நேற்று கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டதாக அமைச்சு அறிவித்தது. அன்றைய தினம் 16 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர்.

இந்தோனீசியாவிலிருந்து குறுகியகால அனுமதி அட்டையுடன் சிறுவன் சிங்கப்பூர் வந்திருந்தான்.

வெள்ளிக்கிழமை அன்று அவனுக்கு தொற்றுக்கான அறி குறி இருப்பது தெரிய வந்தது.

திங்கட்கிழமை அன்று அவனுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ரஷ்ய தற்காப்புக் கலை கலைஞர் ஒருவரும் இதில் பாதிக்கப்பட்டார்.

ரஷ்ய தற்காப்புக் கலை கலைஞர் சிங்கப்பூரில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற் பதற்காக சிங்கப்பூர் வந்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்