சிங்பாஸ் கணக்கு அடை­யா­ளத்தை உறுதி செய்ய 2 புதிய வசதிகள்

சிங்­கப்­பூர் குடி­மக்­கள் அர­சாங்க மின்­னி­லக்க சேவை­க­ளைப் பயன்­படுத்­தும்­போது தங்­க­ளது சிங்­பாஸ் கணக்கு அடை­யா­ளத்தை உறுதி செய்ய இரு புதிய வச­தி­கள் ஏற்­படுத்­தப்­பட்­டுள்­ளன.

கணினி, கேமரா வச­தி­யுள்ள கைபே­சி­கள் மூலம் தங்­க­ளது முக அடை­யா­ளத்­தைப் பதிவு செய்­வது அல்­லது ஒரு­முறை அனுப்­பப்­படும் மறைச் சொல்லை (ஓடிபி) நம்பகமான மற்­றொரு சிங்­பாஸ் பயனா­ள­ரின் திறன்­பே­சிக்கு அனுப்­பிப் பெறு­வது ஆகிய இந்த இரு புதிய செயல்­மு­றை­களும் நேற்று முதல் நடப்புக்கு வந்­தன.

ஏற்­கெ­னவே உள்ள சிங்­பாஸ் கைபே­சிச் செயலி, குறுஞ்­செய்தி மூலம் பெறும் மறைச் சொல்ல (ஓடிபி) போன்­றவற்­று­டன் கூடு­தலாக இவ்­வ­ச­தி­கள் அறி­மு­கப்­படுத்­தப்­பட்டுள்­ள­தாக சிங்­கப்­பூர் அர­சாங்­க தொழில்­நுட்ப முகவை (GovTech) நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

புதிய முக அடை­யாள முறை­யைப் பயன்­ப­டுத்த, சிங்­பாஸ் பய­னா­ளர்­கள் தங்­க­ளது கணக்­கைத் திறக்­கும்­போது பதி­வுப் பெய­ரை­யும் மறைச் சொல்­லை­யும் பயன்­ப­டுத்த வேண்­டும்.

பின்­னர், அவர்­கள் தங்­க­ளது முக அடை­யா­ளத்தை இணைய வச­தி­யுள்ள கணினி கேமரா அல்­லது திறன்­பே­சி­யின் கேமரா மூலம் உறுதி செய்­ய­லாம்.

இந்த முறையில் முக அடை­யா­ளம், தேசிய ‘பயோ­மெட்­ரிக்’ தர­வுத்­தளத்­தில் பதிவாகியுள்ள முக அடையாளத்துடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்படும்.

தர­வுத்­த­ளத்தை உள்­ள­டக்­கிய இந்த உட­னடி சரி­பார்ப்பு செயல்­முறை சிங்­பாஸ் கைபேசி செயலி பயன்­பாட்­டில் இல்லை.

அர­சாங்­க தொழில்­நுட்ப முக­வை­யின் தேசிய மின்­னி­லக்க அடை­யா­ளப் பிரி­வின் மூத்த இயக்கு­நர் திரு குவோக் கியூக் சின், சில பய­னா­ளர்­க­ளால் திறன்­பே­சி­கள் அல்­லது கணி­னி­க­ளைப் பயன்­ ப­டுத்த முடி­யாது என்­பதை முகவை அறிந்­துள்­ள­தா­கக் கூறினார்.

முக அடை­யா­ளத்­தைப் பயன்­படுத்­து­வது, அடை­யா­ளத்தை உறுதி செய்­யும் ஈர­டுக்கு முறைக்கு (2எஃப்ஏ) மாற்­றாக இருக்­கும். இது கூடு­த­லாக ஒரு­முறை அனுப்­பப்­படும் ‘ஓடிபி’யைப் பயன்­படுத்­து­வது போன்ற கூடு­தல் தகவல்­களின் தேவையை குறைக்கிறது.

மேலும் இந்த முக அடை­யா­ள­முறை, குறுஞ்­செய்தி, ஓடிபி போன்­ற­வற்­றைப் பெற உள்­நாட்­டில் பதி­வு­செய்­யப்­பட்ட எண் இல்­லாத வெளி­நா­டு­களில் வசிக்­கும் சிங்கப்­பூ­ரர்­க­ளுக்­கும் உத­வு­கிறது,” என்று­திரு குவோக் தெரிவித்தார்.

புதிய அடை­யாள சரி­பார்ப்பு முறை­க­ளைப் பயன்­ப­டுத்த தகுந்த கரு­வி­கள் இல்­லா­த­வர்­கள், ‘அவர் தெம்­ப­னிஸ்’ மையத்­தி­லு­ள்ள பொது சேவை மையம் அல்­லது மசே நிதி கழ­கத்­தின் பீஷான் சேவை மையம் போன்ற குறிப்பிட்ட இடங்­களில் இச்­சே­வை­யைப் பெற­லாம்.

மோச­டி­யைத் தடுக்க, புகைப் படம், காணொ­ளிப் படம், முகக்­கவசம் அணிந்­தி­ருந்­தல் போன்­ற­வற்­றைக் கண்­டு­பி­டித்து, தடுக்­கும் தொழில்­நுட்­பம் இதில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

மற்றொரு புதிய வசதியில், பய­னா­ளர்­கள் அடை­யாள உறு­தி­யின் ஒரு பகு­தி­யாக, ஒரு­வ­ரின் சார்பில் மற்­ற­வர் குறுஞ்­செய்தி மூலம் ஒரு­முறை பயன்­ப­டுத்­தும் ‘ஓடிபி’யைப் பெற அனு­மதிக்­கப்­படு­கிறது.

எடுத்­துக்­காட்­டாக, வய­தான பெற்­றோர் தங்­க­ளது கணக்­கு­களை பிள்­ளை­க­ளின் திறன்­பேசி எண்­ணு­டன் இணைக்­க­லாம்.

இதன் வழி, பெற்­றோர் சிங்பாஸ் கணக்­கைப் பயன்­ப­டுத்து­போ­தும் ஒரு­முறை பயன்­ப­டுத்­தும் ‘ஓடிபி’யைப் பிள்­ளை­கள் தங்­க­ளது கைபே­சி­யில் பெறு­வார்­கள்.

இந்த வச­தி­யைப் பெறப் பெற்­றோ­ரும் பிள்­ளை­களும் நேரில் சிங்­பாஸ் சேவை முகப்­புக்­குத் தங்­கள் அடை­யாள அட்­டை­யோடு சென்று பதிந்­து­கொள்­ள­வேண்­டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!