மடக்க முடியாத மிதிவண்டியை ரயில் கம்பத்தில் தொங்கவிட்ட ஆடவர் மீது போலிசில் புகார்

மடக்க முடியாத மிதிவண்டியை ரயில் கம்பத்தில் தொங்கவிட்ட ஆடவர் மீது போலிசில் புகார்

1 mins read
0252a618-db82-4427-a3ff-9be68f1e3077
ரயிலில் கம்பிகளில் மிதிவண்டி தொங்குவதையும் மற்ற பயணிகள் மீது அந்த மிதிவண்டியின் உரிமையாளர் சாபமிட்டு கத்துவதையும் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வலம் வந்தது. படம்: ஸ்டோம்ப் -

பெரியவர்கள் பயன்படுத்தக்கூடிய அளவிலான பெரிய மிதிவண்டி ஒன்றை ரயிலுக்குள் கொண்டு சென்றதுடன் அதனைத் தூக்கி கம்பியில் மாட்டிய சம்பவத்தின் தொடர்பில் ஆடவர் மீது எஸ்எம்ஆர்டி நிறுவனம் போலிசில் நேற்று முன்தினம் (டிசம்பர் 15) புகார் அளித்துள்ளது.

ரயிலில் கம்பிகளில் மிதிவண்டி தொங்குவதையும் மற்ற பயணிகள் மீது அந்த மிதிவண்டியின் உரிமையாளர் சாபமிட்டு கத்துவதையும் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வலம் வந்தது.

இந்தச் சம்பவத்தின் தொடர்பில் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று இரவு 7.10 மணியளவில் பதிவிட்ட எஸ்எம்ஆர்டி, உட்லண்ட்ஸ் ரயில் நிலையத்தில், மடக்க முடியாத மிதிவண்டியுடன் அந்த ஆடவர் ரயிலில் நுழைய முற்பட்டதை தமது ஊழியர் தடுக்க முயற்சி செய்ததாகக் குறிப்பிட்டது.

ஜூரோங் ஈஸ்டில் மற்றொரு ரயிலில் ஏறி பைனியர் ரயில் நிலையத்தில் இரவு 7.50 மணியளவில் வெளியானதாகவும் அந்த ஆடவர் அடையாளம் காணப்பட்டு அவர் மீது போலிசில் புகார் அளிக்கப்பட்டதாகவும் எஸ்எம்ஆர்டி தெரிவித்தது.

இனிமையான, மற்றவர்களுக்கு சிரமம் ஏற்படுத்தாத பயணத்துக்கு, விதிமுறைகளைப் பின்பற்றுமாறு எஸ்எம்ஆர்டி பயணிகளைக் கேட்டுக்கொள்கிறது.

குறிப்புச் சொற்கள்